பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டுள்ளேன். அதே போன்று அருமை நண்பர் திரு ராம்குமார் அவர்களும் எனக்கு எல்லா வகையிலும் உற்ற துணையாயமைந்திருப்பவர். கணினிக் கல்வியறிவு மிக்க இவர் சில கணினி நூல்களையும் தமிழில் எழுதிய நூலாசிரியரும் ஆவார். அவரது ஒத்துழைப்பு எனக்குத் தோன்றாத் துணையாக அமைந்ததை நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன். இதழாளர் திரு க. சந்தானம் அவர்களின் உதவிக்கும் ஒத்துழைப்புக்கும் நான் நன்றி கூறுவதில் பெரு மகிழ்வடைகிறேன். கணினித் துறை வல்லுநர் என்ற முறையில் நூல் முழுமையும் ஆழ்ந்து படித்து அவ்வப்போது ஆலோசனை கூறியதோடு நூல் முழுமையும் எழுத்தெண்ணி ஆய்வு செய்து, அருமையான ஆய்வுரை வழங்கிய தொலைத் தகவல் தொடர்புத் துறை, மண்டல கணிணி பயிற்சி மைய விரிவுரையாளர் திரு மு. சிவலிங்கம் அவர்கள் காட்டிய ஆர்வத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் என் இதய நன்றி உரித்தாகும்.

இந்நூலுக்கு மிகச் சிறந்த 'சிறப்புரை'யை வழங்கிய தமிழினக் காவலர், முத்தமிழறிஞர், மூதறிஞர் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் என் மீதும் என் பணி மீதும் காட்டி வரும் ஆர்வமும் அக்கறையும் எனக்குக் கிடைத்துள்ள பெரும் பேறாகும். என் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்ற உந்துதலால் நூல் முழுமையும் பார்வையிட்டு அருமையான சிறப்புரை வழங்கிச் சிறப்பித்த டாக்டர் கலைஞர் அவர்கட்கு எப்படி நன்றி தெரிவிப்பதென்றே தெரியவில்லை. சின்னஞ்சிறு வயதில் தந்தைப் பெரியாரால் உணர்வு ஊட்டப்பட்டு, அண்ணாவின் அறிவாற்றல் மிக்க எழுத்தாலும் பேச்சாலும் எழுச்சி பெற்ற எனக்கு, அன்றும் இன்றும் எதையும் தாங்கும் இதயமாக கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கும் வழி காட்டியாய் இருப்பவர் டாக்டர் கலைஞர் அவர்களே என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. எனக்கு மனச்சோர்வு தலை தூக்கும் போதெல்லாம் அவர்கள் செயல் வேகம் எனக்கு வேக முடுக்கியாயமைந்து விடும். வரலாற்று நாயகரான அவரது பவள விழா நினைவாக இந்நூலை வெளியிட விரும்பினேன். பவள விழா ஆண்டிற்குள் வெளி வருவதில் எனக்கு மட்டிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இனமானப் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் பல்லாண்டுகளாக என்னை வழி நடத்தும் பெருந்தகையாவார். நான் எந்தவொரு தமிழ்ப் பணியை மேற்கொள்ளும் முன்பாக அவரிடம் விளக்கிக் கூறி ஆலோசனை பெற்ற பின்பே அப்பணியை முழுமூச்சுடன் மேற்கொள்வது என் வழக்கம். அவர்களும் அவ்வப்போது தக்க ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி என்னை ஆக்கபூர்வமாக வழி நடத்திச் செல்வது வழக்கம். அவர்களும் பல்வேறு பணிகளுக்கிடையே வழக்கம் போல் நூலை ஆழ்ந்து படித்து, மிகச் சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கி நூலுக்கு அணி செய்திருக்கிறார். என் தமிழ்ப் பணி மீது

7