பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

binary num 90 bind

யாகக் கொண்டு எழுதப்பட்ட எண் முறை.

binary number : இரும எண் : ஒவ் வொரு இலக்கத்திற்கும் 2ஐ அடிப் படையாகக் கொண்ட ஒரு மதிப்பு அளிக்கப்படுகிறது. 0, 1 ஆகிய இரண்டு இலக்கங்களே பயன் படுத்தப்படுகின்றன.

binary number system : இரும எண் முறை : 2-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்முறை.

binary number system or code : இரும எண்முறை அல்லது குறியீடு : 0 மற்றும் 1 ஆகிய இரண்டு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தி எண்களை எழுதும் முறை.

binary point : இருமப் புள்ளி : கலவை யான இரும எண்ணில் முழு எண்ணிலிருந்து அதன் பதின்மப் பகுதியை பிரிக்கும் புள்ளி. 110.011 என்ற இரும எண்ணில் இரண்டு 0-க்களுக்கு இடையில் இருமப் புள்ளி உள்ளது.

binary relation : இரும உறவு : இரண்டு தொகுதிகளுக்கு இடையே உள்ள உறவு.

binary search : இரும தேடல் : ஒவ் வொன்றையும் இரண்டு பகுதி களாகப் பிரித்து, அதில் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மற் றொன்றை ஒதுக்கும் முறை. பல தகவல்தளங்களில் இந்த முறையில் தேடுகிறார்கள்.

binary sequence : இரும வரிசை : தொடர்ச்சியான இரும இலக்கங்கள்.

binary system: இருமமுறை: 0 மற்றும் 1 ஆகிய 2 இலக்கங்களை மட்டுமே பயன்படுத்தும் எண் முறை.

binary-to-decimal conversion : இருமயிலிருந்து பதின்மத்துக்கு மாற்றல் : 2-ன் அடிப்படையில் எழுதப்பட்ட எண்ணை 10-ன் அடிப் படையில் மாற்றி அதற்குச் சமமான இலக்கத்தை எழுதுதல்.

binary-to-gray code conversion : இருமையிலிருந்து கிரே குறியீடுக்கு மாற்றுதல் : இடது புறத்திலிருந்து வலப்புறமாக படிக்கும் விதியைப் பயன்படுத்தி இருமக் குறியீட்டுக்குச் சமமான கிரே குறியீட்டினைக் கொண்டு வரமுடியும்.

binary-to-hexadecimal conversion : இருமயெண்ணிலிருந்து பதினாறெண் அடிப்படைக்கு மாற்றுதல் : 2-ன் அடிப்படையில் எழுதப்பட்ட எண்ணிலிருந்து 16-ன் அடிப்படை யில் எழுதப்பட்ட எண்ணுக்கு மாற்றுதல்.

binary-to-octal conversion : இரும யெண்ணிலிருந்து எண்மைக்கு மாற்றுதல் : 2-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணிலிருந்து 8-ஐ அடிப் படையாகக் கொண்ட எண்ணிற்குச் சமமானதை எழுதுதல்.

binary tree : இரும மரம் : எந்த ஒரு மரத்தையும் இடது, வலது துணை மரங்களாகப் பிரித்தல். ஒவ்வொரு முறையிலும் ஒரு பெற்றோர் மற்றும் இரண்டுக்கு மேற்படாத குழந்தைகள் உள்ள தகவல் அமைப்பு.

binary variables : இரும மாறிகள் : இரண்டு மதிப்புகளில் ஒன்றை உண்மை அல்லது பொய், 1 அல்ல ஏற்கும் மாறி.

bind : கட்டு : 1. எந்திர முகவரியை அளவை அல்லது குறியீடு அல்லது முகவரிக்குக் கொடுத்தல். 2. ஒரு மாறி அல்லது அளவுகோலுக்கு ஒரு வகை மதிப்பை அளித்தல். 3. தொகுதிகளை ஒன்றாக இணைத்தல்.