பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

binding 91 biquinary

binding time : சேர்க்கும் நேரம் : ஒரு தொகுப்பு அடையாள எண் அல்லது முகவரியை எந்திர மொழி வடிவத் தில் மாற்றும் நிலை.

biochip : உயிர் சிப்பு : உயிருள்ள பொருள்களை நுண் சிப்புகளாக மாற்ற கணினி தொழிலின் முயற்சி. இப்போதைய சிலிக்கான் சிப்புகளில் இருந்து 500 மடங்கு அதன் அளவு குறையும் என்று சில மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், இதை செய்ய 80 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலார் சிலர் கூறுகின்றனர்.

biocomputer : உயிர்க் கணினி : உயிர்ச் சிப்புகளில் தனது மையச் செயலகம் அல்லது நினைவகத்தைச் சேர்த்து வைக்கும் கணினி .

biological neuron : உயிரியல் நரம் பகம் : 0.01 மி.மீ. நீளமுள்ள உயிரியல் நரம்பு அறை.

biomechanics : உயிர் எந்திரவியல் : இயக்கத்தின் உயிர்க்கூறு கொள்கை களை ஆய்தல். விளையாட்டு வீரர் கள் மற்றும் பந்தயக் குதிரைகளின் இயக்கத்தை மாதிரியாகக் கொண் டும் உயிர் எந்திரவியல் பயன்பாடு கள் செய்யப்படுகின்றன.

biometrics : உயிரளவை : தனித்தனி உடல் அமைப்புகளை அளக்கும் அறி வியல் . சில பாதுகாப்பு முறைகள் மற் றும் தடய அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

bionics : உயிரியம் : உயிர் அமைப்பு களை ஆராய்ந்து அவற்றின் தன்மை களையும், செயல்பாடுகளையும் மின் னணு மற்றும் எந்திர வன்பொரு ளுடன் தொடர்புபடுத்தல்.

BIOS :பயோஸ் : அடிப்படை உள்ளீடு - வெளியீடு அமைப்பு எனப் பொருள் படும் Basic Input/Output System என்பதன் குறும்பெயர். ஒரு குறிப் பிட்ட கணினிக்கு இசையுமாறு மாற்றப்படும் அமைப்பின் பகுதி.

bipolar : இரு துருவ : சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிக வும் பிரபலமான அடிப்படை முறை. 'இரு துருவ' என்றால் இரண்டு துரு வங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்ஃபீல்டுக்கு மாறானது. மோஸ்ஃபீல்டில் ஒரே துருவம் தான் உண்டு. இதில் ஒரே திசையில் தான் மின்சாரம் பாயும். இரு துருவ டிரான் சிஸ்டர்களில் இரண்டு திசைகளிலும் உள்ள முகப்பு களை நோக்கி மின்சாரம் பாயும். ஒரு துருவம் என்பதற்கு மாறானது.

bios chip : பயோஸ் சிப்பு : உயிரியில் தொழில் நுட்பத்தின் அடிப்படை யில் உருவாகும் புதிய வகை மின்னணு கணினிச் சிப்பு.

BIOS data area : பயாஸ் தகவல் பகுதி: 00404: 0000- வில் துவங்கும் நினை வகத்தின் பகுதி. இங்குதான் பயாஸ் நிலை பற்றிய தகவலையும் விசைப் பலகையின் இடைநிலை நினைவகத் தையும் வைத்திருக்கிறது.

bipolar transmission : இரு துருவ செய்தி அனுப்புகை : பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சமிக்ஞைகளாக மாற்றி மாற்றி அனுப்பும் இலக்க முறை செய்தி அனுப்பும் தொழில் நுட்பம். இரு துருவங்களிலும் மாறும்.

biquinary code : பிக்குனரி பதின் குறியீடு : இருமக் குறிமுறை துண்மி மதிப்புள்ள குறியீடு. பதின்ம எண களைக் குறிப்பிடுவது. பிழை திருத் தத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பதின்ம எண் 5-0ஐக் குறி இரு துண்மி கள். மற்ற 5 துண்மிகளும் பதின்ம