பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

birefringence 92 bit


எண் 0-வை 4-ன் மூலம் குறிப்பிடு கின்றன.

birefringence : இரட்டை பதின்ம அலை வீச்சு : ஒரு படிகத்தைப் பயன் படுத்தி ஒளியை இரண்டு அலை வரிசைகளில் பிரித்து இரண்டு வெவ் வேறு வேகங்களில் ஒன்றுக் கொன்று செங்கோணத்தில் போதல். எல்சிடி காட்சித் திரையில் நிறத்தை வடிகட்டி அனுப்ப இது பயன்படுகிறது.

bisam : பைசாம் : Basic Indexed Se. quential Access Method என்பதன் முதலெழுத்துக் குறும் பெயர்.

bistable : இருநிலை : 1 அல்லது 0, இயங்கும் அல்லது நிறுத்தும். இவை இரண்டு நிலைகளில் ஒன்றை மட் டும் ஏற்கும் வன்பொருள் சாதனம்.

bistable device : இரட்டை நிலைச் சாதனம் : நிறுத்துதல் அல்லது இயங்கு தல் ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே உள்ள சாதனம்.

bi-state : இருநிலை : இரண்டு நிலை கள் மட்டும் இருக்கும்போது அவற் றில் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கணினி உறுப்புகளின் நிலை.

bit : துண்மி : இரு நிலைத் துணுக்கு; செய்தித் துணுக்கு: இரும இலக்கம்: 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0 - வைக் குறிக் கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள் சேர்ந்தே ஒரு எட்டியல் அல்லது ஒரு கணினி சொல் உருவாகிறது.

bit control : துண்மிக் கட்டுப்பாடு : வரிசையான தகவலை அனுப்பும் முறை. இதில் ஒவ்வொரு துண்மியும் ஒரு தனிப் பொருள் கொண்டது. ஒவ்வொரு எழுத்துக்கு முன்னும் பின்னும் ஆரம்பிக்கவும், நிறுத்தவு மான துண்மிகள் இருக்கும்.

bit density : துண்மி அடர்த்தி : ஒரு குறிப்பிட்ட நீள அலகிலோ அல்லது காந்த நாடாவின் பரப்பளவிலோ அல்லது வட்டிலோ பதிவு செய்யப் பட்டுள்ள துண்மிகளை அளப்பது.

bit field : துண்மி புலம் : ஒரு எட்டி யலையோ சொல்லையோ துண்மி களாகப் பார்க்கும் போது, பல துணுக் குகள் ஒன்று சேர்ந்து ஒரு தகவலின் பகுதியைத் தருகிறது. சான்றாக, 0 - 3 துண்மிகள் ஒரு துண்மி புலத்தில் உள்ள எழுத்துகளின் முன்னணி நிறத்தைக் குறிப்பிடுகின்றன.

bit flipping : துண்மி மாற்றுதல் :0-ஐ1 ஆகவும் 1-ஐ 0 ஆகவும் மாற்றும் செயல். சான்றாக, வரைகலை ஆணைத் தொடரில் கறுப்பு - வெள்ளை துண்மி வரைந்த உருவத்தை மாற்ற அதனை துண்மி களை மாற்றிப் பெறலாம்.

bit image : துண்மித் தோற்றம் : ஒரு கணினியின் நினைவகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள துண்மிகளின் கூட்டம். ஒரு செவ்வக மேட்ரிக்ஸ் போல வரிசைப்படுத்தப்பட்டது. கணினியின் காட்சித் திரை பயனாள ருக்குத் தெரிகின்ற ஒரு துண்மித் தோற்றம் எனலாம்.

bit level device : துண்மி நிலை சாதனம் : வட்டு இயக்கி போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு / வெளியீடு செய்யும் Pulse Level Device - க்கு எதிர்ச் சொல்.

bit manipulation : துண்மியைக் கை யாளல் : துண்மிகளை நிறுத்தியோ இயக்கியோ செயலாற்றச் செய்தல். துண்மிமாற்றுதல் என்றும் சில சமயம் சொல்லப்படுவதுண்டு.