பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit pla 94 black

தொகுதி துண்மி சேர்ந்து இரும எண் ஆதல். இரு எண் இலக்கங்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு.

bit plane : துண்மி தளம் : ஈஜிஏ-வில் வீடியோதாங்கி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப் படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்களை இணையாகப் பிரித்து குறிப்பிட்ட நினைவக முகவரியில் நான்கு பட்டியல்களாகக் காணப்படு கின்றன. சில சமயங்களில் தளங் களை வரிசையாகச் சங்கிலியிட்டு ஒன்று அல்லது இரண்டு தளங்கள் இணைக்கப்படுவதுண்டு.

bit rate : துண்மி வீதம் : தகவல் தொடர்பாலோ அல்லது வழித்தடங் களிலோ இலக்கங்கள் அல்லது துடிப்புகள் தோன்றும் விகிதம்.

bit serial : துண்மி தொடர் : ஒரு வழியில் ஒன்றன்பின் ஒன்றாக துண்மிகளை அனுப்புதல்.

bit slice processor : துண்மி - துண்டு செயலகம் : ஒரு தனி சிப்புவில் 2,4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித் தனியாக இயங்குமாறு உள்ள செயல கம், பலவித சொல் அளவுகள் உள்ள வாறு நுண் செயலகங்களை அமைத் தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன் நுண்கணினியில் 8, 12, 16, 24 அல்லது 32 துண்மி கிடைக்கக் கூடிய முறை.

bit specifications : துண்மிவரையறைகள் : ஒரே நேரத்தில் மையச் செய லகம் கணிப்பீடு செய்யும் அளவான கணினியில் உள்சொல் அல்லது பதி வகத்தின் அளவு. தகவல் பரிமாற்றப் பாதை, நினைவகத்திலிருந்து மைய செயலகத்துக்கோ அல்லது வெளிப் புறச்சாதனங்களுக்கோ தகவல்களை அனுப்பும் அளவு.

bit stream: துண்மி ஓட்டம்; துண்மி வரிசை: எழுத்துத் தொகுதிகளாகப் பிரிக்காமல் தகவல் தொடர்புக் கம்பி வழியாக வரிசையாக அனுப்பப் படும் துண்மி தொடர்.

bit stuffing : துண்மி சேர்த்தல் : ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை முழுமைப் படுத்த அனுப்பப்பட்ட செய்தியுடன் துண்மிகளைச் சேர்த்தல். கட்டுப் பாடு குறியீடுகளாகத் தவறாகக் கரு தப்படுவதைத் தடுக்க தகவல் துண்மி களின் அமைப்பைப் பிரித்தல்.

bit test: துண்மிசோதனை : ஒரு குறிப் பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்று அல்லது பூஜ்யமா, இயக்கமா, நிறுத்தமா என்று கண்டறிய உதவும் ஆணைத் தொடர் சோதனை முறை.

bits persecond : ஒரு நொடிக்கு துண்மிகள் : ஒரு நொடிக்கு இத்தனை துண்மி கள் என்ற வகையில் தகவல் துண்மி கள் அனுப்பப்படும் விகிதத்தை அளிக்கும் முறை. பிபிஎஸ் (bps) என்று சுருக்கி அழைக்கப்படும் இதை பாட் விகித அளவுடனும் மாற் றிப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இரண்டின் அனுப்பு தல் விகிதம் சமமாக இருக்க வேண் டிய அவசியமே இல்லை.

bit transfer rate : துண்மி பரிமாற்ற வேகம் : 1. ஒரு குறிப்பிட்ட நேர அல கில் இடமாற்றம் செய்யப்பட்ட துண்மிகளின் எண்ணிக்கை. 2. ஒரு நொடிக்கு இத்தனை துண்மி என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும்.

bit twiddler : துண்மி ஆர்வலர் : 1. கணினி நேசர். 2. கணினியோடு பணி யாற்றுவதில் மகிழ்ச்சி அடைபவர்.

BL : பிஎல் : Blank and Empty Space in text என்பதன் குறும்பெயர்.

black box : கறுப்புப் பெட்டி : எதிர் பார்க்கப்படும் முறையில் உள்ளீடு