பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

block dev 96 block mov

block device : கட்ட அமைப்புச் சாதனம் : ஒரு நேரத்தில் தகவல் எட்டியல் களின் தொகுதியை வட்டு போன்ற ஒன்றுக்கு அனுப்பும் வெளிப்புறச் சாதனம்.

block diagram : கட்ட வரைபடம்; பகுதி வாரி வரைபடம் : தகவல்களை செயலாக்கம் செய்யப்படுகின்ற அளவை வரிசை குறிப்பிடும் வரை பட வடிவம்.

blocked process : தடுக்கப்பட்ட செயல்முறை : தேவையான வசதிகள் கிடைக்காமல் போதல் அல்லது முன் னதாகவே தடுக்கப்படுவதால் செய் யப்பட முடியாத கணிப்பு செயல்முறை.

blocked records : தொகுக்கப்பட்ட பதிவேடுகள் : இரண்டு அல்லது மேற் பட்ட அளவைக் கோப்புகளில் உள்ள ஏடுகளை ஒரே குழுவாக்கி ஒற்றை ஏடாக மாற்றி அமைத்தல்.

block gap : தொகுதி இடைவெளி : பதிவேடுகளுக்கு இடையிலுள்ள இடைவெளி.

block graphics: தொகுதி வரைகலை: தொகுதி வரைகலை எழுத்துக்கள், அஸ்கி எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை உரு வங்கள். இந்த எழுத்துகளை சாதாரண எழுத்துகளைப் போலவே கணினி கையாள்வதால் துண்மி மேப் வரைகலைகளைவிட தொகுதி வரை கலைகளை கணினி வேகமாகக் காட்ட முடியும். அவற்றை அனுப்பு வதும் விரைவாக நடக்கும்.

block header : தொகுதித் தலைப்பு : ஒரு நினைவக தொகுதியையோ மற்றும் அதன் உள்ளடக்கங்களை யோ குறிப்பிடும் தகவல்களின் சிறு பதிவேடு.

blocking : தொகுத்தல்; தொகுதியாகக் குறியிடல் : திரட்டல் தொகுதி என்று அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சி யான சேமிப்பு அலகாக குறிப்பிட்ட அளவில் பதிவேடுகளைத் தொகுக் கும் செயல். கணினியின் உள்ளீடு , வெளியீடு செயல்முறைகளின் திறனை அதிகரிக்க இவ்வாறு செய்வ துண்டு. சொல் செயலாக்கத்தில், பனுவலின் ஒரு பகுதி தொகுதியாக ஒதுக்கப்படுவதுண்டு.

bloking factor : தொகுக்கும் காரணி : ஒரு வட்டு அல்லது காந்தநாடாவில் உண்மையாக இருக்கும் பதிவேட்டின் படி உள்ள அளவைப்பதிவேடுகளின் எண்ணிக்கை.

blockingobject : தொகுக்கும் பொருள்: பொருள் சார்ந்த ஆணைத் தொடர் களில், பல்வகைக் கட்டுப்பாட்டு இழைகளுக்கு உறுதியளிக்கும் அமைப்பு கொண்ட இயங்காத பொருள்.

block length : தொகுதி நீளம் : ஒரு தொகுதியின் அளவை அளப்பது. பொதுவாக பதிவு, சொற்கள், எழுத் துகள் அல்லது எட்டியல்கள் என்ற அலகுகளில் குறிப்பிடப்படும்.

block list : தொகுதிப் பட்டியல் : ஒரு கோப்பின் அச்சுத் திணிப்பு. மீண்டும் மாற்றியமைப்பதை குறைவாகச் செய்து, பதிவுகளும், புலங்களும் அச் சிடப்படுகின்றன.

block move : தொகுதியாக நகர்த்தல் : 1. ஒரு பனுவலின் தொகுதியை ஒரு ஆவணம் அல்லது கோப்பில் இருந்து வேறொரு ஆவணம் அல்லது கோப் புக்கு மாற்றுதல். 2. சொல் செயலி களில் ஒரு பனுவலின் தொகுதியை அடையாளம் கண்டு ஒரு கோப்பின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நகர்த்தும் வசதி.