பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

associative dimensioning

99

asymmetrical transmission


associative dimensioning : சார்புப் பரிமாணம் அமைத்தல் : பரிமாணப் பொருள்களில் பயனாளர் செய்யும் மாற்றங்களுக்கேற்ப நிரலானது தானாகவே பரிமாணப் பொருள்களில் மாற்றம் செய்து கொள்ளும் செயல்முறை.

associative memory : சார்பு நினைவகம் : ஒரு சேமிப்புச் சாதனம். இதன் சேமிப்பு இருப்பிடங்களை அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டே அடையாளம் காணமுடிகிறது.

associative retrieval : சார்பு மீட்பு : இணை மீட்பு.

associative store : சார்புறு சேமிப்பு.

associative storage : சார்புறு சேமிப்பு : இதன் நினைவிடங்கள் அதன் உள்ளடக்கத்தினால் அறியப் படுகின்றன. (இது பெரும்பாலான கணினி சேமிப்புகளில் பெயர் அல்லது எண்ணால் நினைவிடத்தைக் குறிப்பிடுவதற்கு மாறானது). உள்ளடக்க முகவரி நினைவகம் என்றும் தேடல் நினைவகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

assumed decimal point : எடுபதின்மப் புள்ளி : கற்பனைப் பதின்மப் புள்ளி.

astable : நிலையற்ற : மின்னணு மின் சுற்றுகளில் மாறிக்கொண்டிருக்கும் நிலை. ஒரு நிலையில் இருந்து தொடர்ச்சியாக வேறொரு நிலைக்கு மாறிக் கொண்டே இருத்தல். மின்னணுக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் நேரம் அமைக்கும் மின்னணுச் சாதனம் மற்றும் கணினி கடிகாரத்துக்கும் இதுவே அடிப்படை.

asterisk : உடுக்குறி : பல கணினி மொழிகளில் பெருக்கல் செயற்குறியாக பயன்படும் குறியீடு.

astomisher : வியப்பாளி.

astronomy : வானவியல் : நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி மின்னணுத் தகவல் தொடர்பு முறையில் ஆராயும் அறிவியல்.

asymmetrical transmission : செஞ்சீரிலா செலுத்துகை, சமச் சீரற்ற அனுப்பீடு : அதிவேக இணக்கிகளில் (modems) பயன்படுத்தப்படும் அனுப்பீட்டு முறை. குறிப்பாக வினாடிக்கு 9, 000 துண்மி (பிட்) கள், அதற்கும் அதிகமாக அனுப்பவல்ல இணக்கிகளில் இம்முறை செயல் படுத்தப்படுகிறது. இம்முறையில் ஒரே நேரத்தில் தகவலை வெளிச் செலுத்தவும் உள்வாங்கவும் முடியும். தொலைபேசித் தகவல் தடத்தின் கற்றையை இரு பாதைகளாக்கி