பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1002

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1001


new message

குறியீடு என்பது நகர்த்தியின் திரும்புகை (carriage return), வரியூட்டல் (line feed) ஆகிய இரண்டு குறியீடுகளும் இணைந்த ஒன்றாகும்.

new message : புதுச் செய்தி.

new/open/close : புதிய / திற / மூடு : அனைத்து மென்பொருள்களிலும் கோப்பு (Fie) பட்டியில் இருக்கும் தேர்வுகள்.

new option : புதிய விருப்பத் தேர்வு.

new record : புதிய ஏடு.

news : செய்திகள்.

new search : புதிய தேடல்.

news feed or newsfeed : செய்தி ஊட்டல்; செய்தி உள்ளிடல் : செய்தி வழங்கன்களில் செய்திக்குழுக் கட்டுரைகளை விநியோகித்தல், பரிமாறிக் கொள்ளல், பரப்புதல். என்என்டீபீ நெறிமுறை அடிப்படையில் பிணைய இணைப்புகள் மூலமாக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும், செய்தி வழங்கன்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

news group : செய்திக்குழு : இணையத்தில் குறிப்பிட்ட தலைப்புகளில் உறுப்பினர்கள் கலந்துரையாடும் மன்றம். ஒரு

1001

. newsrc

செய்திக் குழுவில் கட்டுரைகள் இடம்பெறும். அவற்றுக்கான ஐயங்கள், பதில்கள், மறுப்புரைகள் இடம் பெறலாம். ஒவ்வொரு செய்திக்குழுவுக்கும் ஒரு பெயர் உண்டு. படிநிலையில் தொடர்ச்சியான சொற்களினால் (இடையே புள்ளியிட்டு) கருப்பொருளின் உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். (எ-டு) : rec crafts textiles needlework.

news master : செய்திப் பொறுப்பாளர்; செய்தித் தலைவர் : இணையத்தில் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் செய்தி வழங்கனைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் நபர். newsmaster@domain. name என்ற முகவரிக்கு அனுப்பப்படும் அஞ்சல்கள் இவருக்குப் போய்ச்சேரும்.

. newsrc : நியூஸ்ஆர்சி யூனிக்ஸ் அடிப்படையிலான, செய்தி வாசகர்களுக்கான நிறுவு கோப்பினை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர் (File extention). இந்த நிறுவு கோப்பு, பயனாளர் உறுப்பினராயுள்ள செய்திக்குழுக்களின் பட்டியலையும் ஒவ்வொரு செய்திக்குழுவிலும் பயனாளர் ஏற்கெனவே வாசித்த கட்டுரைகளின் பட்டியலையும் கொண்டிருக்கும்.