பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1003

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

news reader

1002

NeXT



news reader : நியூஸ் ரீடர் : ஒரு யூஸ் நெட் கிளையன் நிரல். யூஸ்நெட் செய்திக் குழுவில் பயனாளர் உறுப்பினராகவும், கட்டுரைகளைப் படித்தறியவும், பதில்களை அனுப்பவும், மின் அஞ்சல் மூலம் பதில் அனுப்பவும், கட்டுரைகளை அனுப்பவும் உதவும். இன்றைக்கு பல இணைய உலாவிகளும் இத்தகைய வசதிகளைத் தருகின்றன.

news server : செய்தி வழங்கன் : இணையத்திலுள்ள செய்திக் குழுக்களின் தரவுகளை நியூஸ் ரீடர் கிளையன்களுக்கும் ஏனைய வழங்கன்களுக்கும் பரிமாறிக்கொள்ளும் ஒரு கணினியை அல்லது நிரலை இவ்வாறு அழைக்கலாம்.

newton : நியூட்டன் : ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சொந்த இலக்கமுறைத் துணைவன் (Personal Digital Assistant) சாதனத்தின் பெயர் ஆப்பிள் நியூட்டன் மெலேஜ்பேடு எனப்பட்டது.

Newton-Raphson : நியூட்டன் ராஃப்சன் : சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒன்றோடொன்று செயற்படக்கூடிய நடைமுறை.

Newton OS : நியூட்டன் ஓஎஸ் : ஆப்பிள் நியூட்டன் மெலேஜ் பேடு எனப்படும் சொந்த இலக்கமுறைத் துணைவனில் செயல்படும் இயக்க முறைமை.

new wave : புதிய அலை (நியூ வேவ்) டாசுக்கும் விண்டோசுக்கும் இடையில் ஒடும் பீசி. செயற்பாட்டுச் சூழ்நிலை. எச். பி. உருவாக்கியது. அது தரவுகளை ஒருங்கிணைத்து பணிகளை இயக்கி அமைப்புக்குள் செயலாற்றும். பல்வேறு தரவுப் பயன்பாடுகளைக் கலந்து ஒரு கூட்டு ஆவணத்தை உருவாக்கும் பொருள் மேலாண்மை வசதியை அனுமதிக்கும். ஏதாவதொரு மூலக் கோப்பில் தரவு புதுப்பிக்கப்பட்டால், அகநிலை இணைப்புகள் ஆவணத்தைத் தானாகவே மேம்படுத்தும். காலம் அல்லது நிகழ்வுகளால் இயக்கப்படும் உதவியாளர்களை உருவாக்க அனுமதிக்கும். புதிய அலைகளின்கீழ் இயங்க நிரல் தொடர்களை மாற்ற வேண்டும்.

NeXT : நெக்ஸ்ட் : நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் (NeXT Computer) என்ற நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த நிறுவனம் பின்னாளில் நெக்ஸ்ட் சாஃப்ட்வேர் நிறுவனம் என்றழைக்கப்பட்டது. ஸ்டீவன் ஜாப்ஸ் (Steven Jobs) என்பவர் 1985இல் நிறுவிய ஒரு கணினித் தயாரிப்பு மற்றும்