பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1005

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nickel cadmium battery

1004

nil pointer


படும் network information center என்ற தொடரின் சுருக்கம். ஒரு பிணையத்தைப் பற்றியும், அதிலிருந்து பெறப்படும் சேவைகள் பற்றியும், பயனாளர்களுக்கு தகவல் வழங்கும் அமைப்பு. இணையத்தின் முதன்மை நிக், இன்டர்நிக் எனப்படுகிறது. அக இணையம் மற்றும் பிற தனியார் பிணையங்கள் தமக்கென தனியான நிக் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.

nickel cadmium battery : நிக்கல் கேட்மியம் மின்கலன் : கார மின்பகுப்புத் திரவம் கொண்ட மின்னூட்டத்தகு மின்கலம். இதே போன்ற ஈய அமில மின் கலன்களைவிட நிக்கல் கேட்மியம் மின்கலன்கள் நீண்ட நாட்கள் செயல்படுபவை. நீண்ட நாட்கள் சேமிக்க வல்லவை.

nickel hydride : நிக்கல் ஹைட்ரைட் : சக்தி ஏற்றக்கூடிய மின் கலங்களை உருவாக்கப் பயன்படும் பொருள். நிக்கல் மின்கலங்களைவிட இது ஒரு கிலோவுக்கு அதிக சக்தியைத் தருகிறது. நினைவக விளைவை அவை காட்டுவதில்லை.

nickel metal hydride battery : நிக்கல் உலோக ஹைடிரைடு மின்கலன் : 'நிக்கல் கேட்மியம், காரப்பொருள் மின்கலன்களைவிட அதிக வாழ்நாளும் உயர்ந்த செயல்திறனும் கொண்ட மறு மின்னூட்டத்தகு மின்கலம்.

nickname : புனைபெயர் : செல்லப்பெயர் : மின்னஞ்சலில் பெறுநர் முகவரி இடம் பெறும் இடத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட முழுப் பிணைய முகவரி களைத் தருவதற்குப் பதில் சுருக்கமாகப் பயன்படுத்தும் பெயர். (எ-டு) kumar@annauniv. edu என்பதற்குப் பதிலாக kumar என்பது புனை பெயராக இருக்கலாம். நிரலில் புனைபெயர் நிலைப்படுத்தப்பட்டது எனில், முழுப் பெயரையும் கொடுப்பதற்குப் பதில் kumar என்று மட்டும் குறிப் பிட்டால்போதும். கணினித் துறையில் பணியாற்றுபவர்கின் முகவரிகள் name@computer annauniv. edu என்றிருக்கலாம். computer faculty என்னும் புனை பெயர் கணினித் துறையைச் சார்ந்த அனைவரையும் குறிப்பதாக இருக்கலாம்.

niladic : இயக்கப்படும் எண்கள் இல்லாத : உறுப்பிலா : இயக்கப்படும் எண்கள் (operands) எதுவும் குறித்துரைக்கப்படாத ஒரு செயற்பாடு தொடர்புடையது.

nil pointer : இன்மை சுட்டு : ஒரு பிணைப்புள்ள பட்டியலின் முடிவினைக் குறிக்கப் பயன்படும் சுட்டு.