பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1006

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nine's complement

1005

NMOS or N-MOS



nine's complement : ஒன்பதின் குறை நிரப்பு எண் : ஒவ்வொரு இலக்கத்தையும் ஒன்பதிலிருந்து கழித்துக் கிடைக்கும் ஒரு பதின்ம எண்ணின் குறை நிரப்பு எண். எடுத்துக்காட்டு 567 என்ற எண் 432 என்ற எண்ணின் ஒன்பதின் குறைநிரப்பு எண். இது 999 என்ற எண்ணிலிருந்து 432-ஐக் கழிப்பதன் மூலம் கிடைக்கிறது. இது ஒன்றின் குறை நிரப்பு எண், இரண்டின் குறை நிரப்பு எண், பத்தின் குறை நிரப்பு எண் போன்றது.

ninety column card : தொண்ணூறு பத்தி அட்டை : அகல்விரி தானியங்கிக் கணினியில் (Universal Automatic Computer-UNIVAC) அட்டை கையாள்தல் சாதனத்தில் பயன்படுத்தப்படும் துளையிட்ட அட்டை. இது 90 பத்திகளைக் கொண்டது. ஒவ்வொரு பத்தியில் ஒர் எழுத்தினைத் துளையிடலாம். இது ஹோலரித் அட்டை தொண்ணூற்றாறு பத்தி அட்டை ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

ninetysix column card : தொண்ணூற்றாறு பத்தி அட்டை : அட்டை கையாள்தல் சாதனத்தில் பயன்படுத்தப்படும் துளையிட்ட அட்டை. இது 18 வரிசை களையும் 36 பத்திகளையும் கொண்டது. ஒவ்வொரு பத்தியிலும் மூன்று எழுத்துகளைத் துளையிடலாம். இது ஹோலரித் அட்டை தொண்ணூறு பத்தி அட்டை ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.

NIS : நிஸ் : என்ஐஎஸ்  : பிணைய தகவல் சேவை எனப் பொருள்படும் Network Information Service என்ற தொடரின் சுருக்கம்.

nixie tube : எண்காட்சிக் குழாய் : நிக்சி குழல் : தெளிவான எண்களைக் காட்சியாகக் காட்டுவதற்குப் பயன்படும் வெற்றிடக் குழாய்.

n-key rollover : என்-விசை சுற்றுதல் : வேக தட்டச்சுக்கான விசைப்பலகை மின்சுற்று வடிவமைப்பு. இதை சோதிக்க எந்த விசைகளில் இருந்தும் விரலை எடுக்காமல் நான்கு அடுத்தடுத்த விசைகளை அழுத்த வேண்டும். நான்கு எழுத்துகளும் திரையில் தோன்றினால் அந்த விசைப்பலகையில் இந்த விசை இருக்கிறது என்று பொருள்.

. nl : . என்எல் : ஒர் இணைய தள முகவரி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப் பெயர்.

NMOS or N-MOS : என்-மாஸ் : N-தட உலோக