பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1007

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

NNTP

1006

noise pollution


ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் N- channel metal oxide semiconductor என்ப தன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semi conductor Field Effictive Transistor) களில் மின் இணைப்புத்தடம் துளைகளின் நகர்வுகளால் ஏற் படுவதில்லை (மின்னணு ஒர் அணுவிலிருந்து இன்னோர் அணுவுக்கு இடம் பெயர் வதால் ஏற்படும் வெற்று இடம் துளை (hole) எனப்படுகிறது. மின்னணு இடம் பெயர் வதால்தான் துளை ஏற்படு கிறது. துளைகளைவிட மின் னணு வேகமாக இடம்பெயரும் என்பதால் என்மாஸ், பீமாஸை விட வேகமானது ஆனால் என் மாஸை வடிவமைப்பது கடின மானது அதிகச்செலவு பிடிக்கும்.

NNTP : என்என்டீபீ : பிணையச் செய்திப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Network News Transfer Protocal 676119 தொடரின் சுருக்கச் சொல். செய்திக் குழுக்களின் பரப்பு கையை இந்த இணைய நெறி முறை நிர்வகிக்கிறது.

.no : .என்ஓ : ஒர் இணைய தள முகவரி நார்வே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

node : மைய முனை : 1. ஒரு கணினி இணையத்தில் ஒரு சேர் முனையம் அல்லது செய்தித் தொடர்புக் கணினி. 2. மரம் போன்ற அமைப்பில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் பட்ட கிளைகள் ஒன்றிணையும் மைய முனை. 3. அச்சிட்ட மின் சுற்று வழிப்பலகையில் பல் வேறு அமைப்பிகள் ஒன்றாக இணையும் இடம்.

noise : இரைச்சல் : 1. ஒரு சாதனத்தில் அல்லது பொறி யமைவில் இயல்பான செயற் பாட்டிற்குக் குந்தகம் விளை விக்கும் விரும்பத்தகாத ஒலி. இது, அந்தச் சாதனத்தின் அமைப்பிகளாலோ இயற்கை யாகவோ அல்லது மனிதரின் குறுக்கீட்டினாலோ ஏற்படலாம். 2. பிழைகள் உண்டாவதற் குக் காரணமாக இருக்கக்கூடிய போலிக்குறியீடுகள் அல்லது விரும்பத்தகாத குறியீடுகள்.

noise immunity : இரைச்சல் ஏமக் காப்பு : தேவையான குறி யீடுகளை மட்டும் ஏற்றுக் கொண்டு வேண்டாத குறியீடுகளை ஒதுக்கிவிடும் திறனுடைய சாதனம்.

noise pollution : ஒலித் தூய்மைக் கேடு : ஆக்கப் பணிகளிலிருந்து கவனத்தைச்