பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1008

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1007


சிதறடிக்கக்கூடிய ஒசை. குறிப்பாக அலுவலகங்களில் ஏற்படும் தேவையற்ற இரைச்சல். அச்சு எந்திரங்கள், தட்டச்சுப் பொறிகள், படியெடுப்பு எந்திரங்கள் போன்றவற்றிலிருந்து எழும் ஒசைகள் இவ்வகையின.

non-blocking : தடுக்காத நிலை : தடை அல்லது தாமதம் இன்றி ஒரு சமிக்கை, அது போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைதல்.

non-breaking hyphen : பிரிக்காத ஒட்டுக்குறி (ஹைஃபன்) : சொல் செயலிகளில் பயன்படுத்தப்படும் சொல். இதில் ஒரு கோட்டின் இறுதியில் வரும் (ஹைஃபன்) சேர்ந்த சொல்லைப் பிரிக்கக்கூடாது. சான்றாக ஃபிளிப்-ஃப்ளாப் என்ற சொல்லை இரண்டு வரிகளில் பிரித்தால் குழப்பம் ஏற்படும். பிரிக்காத சிறுகோட்டை நுழைத்தால் இரண்டு சொற்களை ஒன்றாகவே வைக்கும்.

non breaking space : முறிவிலா இடவெளி : ஒரு சொல்லின் இரு பகுதிகள் அல்லது இரு சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது பிரிந்துவிடாமல் இருக்க வழக்கமான இடவெளி (Space)-க்குப் பதிலாக இடம் பெறச்செய்யும் குறியீடு. இருபகுதிகளும் பிரியாமல் ஒரே வரியில் இருக்கச் செய்யும். திரு. அறிவரசு என்ற சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது இடமில்லாமையால் திரு. என்பது முந்தைய வரியிலும் அறிவரசு அடுத்த வரியிலும் இடம் பெறும். திரு. அறிவரசு என்ற சொற்கள் இணைபிரியாமல் ஒரே வரியில் நிற்கவேண்டுமெனில் இரு சொற்களுக்குமிடையே முறிவிலா இடவெளியை இடம்பெறச் செய்யவேண்டும்.

non conducting : மின் கடத்தாதிருத்தல்.

non conducting state : மின் கடத்தா நிலை.

non conductor : மின் கடத்தாப் பொருள் : மின்னோட்டம் பாய முடியாத பொருள். இது மின் கடத்திகளிலிருந்து வேறுபட்டது.

noncontiguous data structure: தொடர்பறு தரவுக் கட்டமைப்பு : நினைவகத்தில் தொடர்ச்சியில்லாமல் உறுப்புகள் இருத்தப்படுகின்ற ஒரு தரவு கட்டமைப்பை இவ்வாறு குறிக்கிறோம். வரைபட, மர வகையைச் சார்ந்த தரவு கட்டமைப்புகளின் உறுப்புகள் நினைவகத்தில் தொடர்ச்சியின்றி ஆங்காங்கே இருத்தப்படுகின்றன. அடுத்தடுத்த