பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1009

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nondestructive read

1008

non graphic character


உறுப்புகள் முகவரிச் சுட்டுகள் (pointers) மூலம் அறியப்படுகின்றன.

non destructive read : அழித்திடாப் படிப்பு சேமிப்புச் சாதனங்களின் உள்ளடக்கங்களை அழித்து விடாத படிப்புச்செயற்பாடு.

nondestructive readout : அழிவிலாப் படிப்பு : நினைவகத்தில் உள்ள தகவலைப் படித்தவுடன் அழிந்து போகாமல் படிக்கும் முறை. தகவலை அழிய விடாமல் இருத்திவைக்கும் சேமிப்புத் தொழில்நுட்பம் அல்லது படித்தவுடன் தகவலை மீண்டும் புதுப்பிக்கும் தொழில் நுட்பம் மூலம் அழிவிலாப் படிப்பு இயல்வதாகிறது.

non document : வாசகமிலா ஆவணம்.

non document mode : ஆவணம் இல்லாத முறை : மூலமொழி நிரல் தொடர்கள் பிரிவு கோப்புகள் மற்றும் பொதுச் சொற் கோப்புகளையும் வேறு நிரல் தொடருக்கு மாற்றுவதற்காக உருவாக்கும் சொல் செயலாக்க முறை. உரிமையாளர் படிவக் குறியீடு இல்லாத சொற்பகுதியைக் கொண்ட கோப்பை உருவாக்குகிறது. நார்ட்டன் எடிட்டர், எக்ஸ் ஒய் ரைட் போன்ற


சொல்செயலிகள் மற்றும் உரைத்தொகுப்பிகள் தானாகவே அஸ்கி சொற்கோப்புகளை உருவாக்குகின்றன. அவற்றுக்கு இந்த வாய்ப்பளித்தல் தேவையில்லை.

none : எதுவுமில்லை.

non erasable storage : அழித்திட முடியாத சேமிப்புச் சாதனம் : கணிப்பின்போது தன்னிடம் அடங்கியுள்ள தகவல்களை அழித்திட முடியாத சேமிப்புச்சாதனம். துளையிட்ட காகித நாடா, துளையிட்ட அட்டைகள், சில வகை அழிக்க முடியாத படிப்புக் காந்த நினைவகம் ஆகியவை இவ்வகைச் சாதனங்கள்.

non executable statement : நிறைவேற்ற முடியாத கட்டளை: ஒரு செயல்முறையை வகுத்து அந்தச் செயல்முறையில் அடங்கியுள்ள குறிப்பிட்ட நடவடிக்கை எதனையும் நிறைவேற்றும்படி கோராத கட்டளை. இது நிறைவேற்றத் தக்க கட்டளையிலிருந்து வேறுபட்டது.

non graphic character : வரை கலையல்லாத எழுத்து : வரைவியல் சாராத உருக்காட்சி : அச்சடிப்பானுக்காக அல்லது காட்சித்திரைக்காக அமைக்கப்