பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1011

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1010


nonmodel

1010

nonprocedural query


nonmodel : முறை இல்லாத : முறை சார்ந்திராத தெளிவான முறை பொத்தான் அமைக்காமல் ஒரு சூழ்நிலையில் இருந்து வேறொன்றுக்கு மாறுதல்.

nonnumeric programming : எண்களிலாச் செயல்முறைப்படுத்துதல் : எண்களை விடுத்து சைகைகளைக் கையாளும் செயல்முறைப்படுத்துதல். எண்மானக் கணிப்புகள் அல்லாமல் சொற்கள் போன்ற சைகைப் பொருள்களைக் கையாள்வதை இது குறிக்கிறது.

nonoverlap processing : உடன் நிகழா செயலாக்கம் : படித்தல், எழுதுதல், உள்முகச் செய்முறைப்படுத்துதல் ஆகியவை ஒரு தொடர் வரிசை முறையில் மட்டுமே நடைபெறும் உத்தி. இது மேற்கவிந்த செய்முறைப்படுத்துதலிலிருந்து வேறுபட்டது.

nonprint . அச்சுத் தவிர்ப்பு : அச்சடிப்புத் தடைத் துடிப்பு : எந்திரக் கட்டுப்பாட்டின்கீழ் வரிவாரி அச்சடிப்பினைத் தடுக்கிற ஒரு துடிப்பு.

nonpreemptive multitasking : முற்படு பல்பணியாக்கம் : ஒரு பயன்பாடு இயங்கும்போது, மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டை வேறொரு பயன்பாட்டுக்குத் தருதல். சான்றாக பயனாளர் உள்ளீட்டை ஏற்றுக் கொள்ள அது தயாராதல். இந்த முறையில் ஒரு நிரல் தொடர் ஒரு எந்திரத்தை ஆட்டி வைக்க முடியும்.

non procedurat language : செயல்முறைசாரா மொழி : தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்றுக்கிடையேயான உறவுமுறைகள் அடிப்படையில் வினவல்கள் மூலமாகக் குறிப்பிட்ட விடையைப் பெறும் மொழிகளை செயல் முறைசாரா மொழிகள் எனலாம். டி'பேஸ் ஃபாக்ஸ்புரோ, எஸ்கியூஎல் போன்ற மொழிகள் இவ்வகையில் அடக்கம். இவற்றை நான்காம் தலைமுறை மொழிகள் என்றும் கூறுவர்.

nonprocedural query language : நடைமுறைசாராக் கேள்வி மொழி : ஒரு தரவுத் தளத்துடன் செய்திப் பரிமாற்றம் செய்வதற்கான கணினி மொழி. இது கணினியை பயன்படுத்துபவர் தரவுவைப் பெறுவதற்குத்