பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1017

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1016


novell network 1016 NPN transistor

கல்விச் சேவைகளுக்கான செயற்கைக் கோள் சார்ந்த பிணையம். மூன்றாம் வகுப்பிலிருந்து பட்டமேற்படிப்பு வரை நூற்றுக்கணக்கான பாடங்களில் 10,000 மணிகளுக்கு மேலான பாடப்பொருள் இதில் உள்ளது.

novell network : நோவெல் பிணையம் : நோவலின் நெட்வொர்க் இயக்க அமைப்புகளில் ஒன்றினால் கட்டுப்படுத்தப்படும் குறும்பரப்புப் பிணையம் (LAN).

Novel NetWare : நாவெல் நெட்வேர் : நாவெல் நிறுவனம் தயாரிக்கும் குறுபரப்புப் பிணைய இயக்க முறைமையின் மென்பொருள் தொகுதிகள். ஐபிஎம்பீசி மற்றும் ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படக்கூடியவை. பிணையப்பயனாளர்கள் கோப்புகளையும், நிலைவட்டுகள் மற்றும் அச்சுப் பொறிகள் போன்ற முறைமை வளங்களையும் பகிர்ந்து கொள்ள நாவெல் நெட்வேர் அனுமதிக்கிறது.

no wait state memory : காத்திருக்காத நிலை நினைவகம் : மையச் செயலகத்தின் தேவைகளைச் சமாளிக்கும் அளவுக்கு வேகமுள்ள நினைவகம்.சோம்பலாய் காத்திருக்கும்நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை.

Noyce Robert : நாய்ஸ், ராபர்ட் : கோளச் செய்முறையை ஜீன் ஹீர்னி என்பாருடன் சேர்ந்து உருவாக்கியவர். இதில் மின் சுற்றுவழி அமைப்பிகள், சிலிக்கன் போன்ற மென்வட்டில் ஒளிச்செதுக்குச் செய்வதன் மூலம் இணைக்கப்படுகின்றன.

.np : என்பீ : ஒர் இணைய தள முகவரி நேபாள நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

NPN transistor : என்பீஎன் மின்மப் பெருக்கி : மின்மப் பெருக்கிகளில் ஒரு வகை.N வகைப் பொருளால் ஆன உமிழிக்கும் திரட்டிக்கும் இடையில் பின்னப்பட்ட P-வகை பொருளால் ஆன அடிவாய் (Base) கொண்டது. அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்று முனையங்களின் வழியே மின்னோட்டம் பாய்கிறது. N-P-N மின்மப் பெருக்கிகளில் மின்னணுக்கள்தாம் மின்னூட்டச் சுமப்பிகளாய்ச் செயல்படுகின்றன. அவை உமிழியிலிருந்து திரட்டியை நோக்கிப் பாய்கின்றன.