பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

asynchronous data

101

asynchronous protocol


உருவாக்கப்படும் சமிக்கையைத் தொடர்ந்து அல்லது செயலாக்கத்துக்குச் சாதனம் கிடைக்கும்பொழுது அடுத்த செயல் தொடரும் கணினி. நேர்ச் சீர்க் கணினிக்கு இது மாறானது.

asynchronous data transmission : நேரச் சீரிலா தகவல் அனுப்புகை : ஒத்தி யங்கா தகவல் அனுப்புகை.

asynchronous device : நேரச் சீரற்ற சாதனம் : தகவல் தொடர்பு கொள்ளும் கணினி அமைப்புக்கு வெவ்வேறு இடைவெளிகளில் சமிக்கைகளை அனுப்பிடும் சாதனம்.

asynchronous input : ஒத்தி யங்கா உள்ளீடு : நேரச்சீரிலா உள்ளீடு : கணினியின் நேரச்சீரிலா உள்ளீட்டுத் தகவல்.

asynchronous mode : நேரச் சீரிலா பாங்கு : ஒரு செயல் முடிந்த பிறகே அடுத்ததைத் தொடங்க அனுமதிக்கும் முறையில் செயலாற்றும் கணினி, ஒரே நேரச்சீர்க் கணினியில் உள்ளது போல் ஒரு செயலைச் செய்ய அடுத்த நேரத் தொடக்கம் வரை கரத்திருக்க வேண்டியதில்லை.

asynchronous operation : ஒத்தியங்காச் செயல்பாடு : கடிகாரம் போன்ற ஒரு நேரச் சாதனத்தை சாராமல் தனித் தியங்கும் ஒரு செயல்பாடு. எடுத்துக்காட்டாக, இரண்டு இணக்கிகள் தமக்குள் ஒத்தியங்காத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்போது நேரக் கணக்கின்படி தகவலை அனுப்புவதில்லை. தொடங்கு, நிறுத்து என்னும் சமிக்கையை ஒன்றுக் கொன்று அனுப்பி தமக்குள் சீராகத் தகவலை பரிமாறிக்கொள்கின்றன. ஒத்தியங்கு செயல்பாட்டுடன் ஒப்பிடுக.

asynchronous procedure call : ஒத்தியங்காச் செயல்முறை அழைப்பு : செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் நிரல் தொடரில், ஒரு செயல்கூறு இயக்கப்படுவதற்கான நிபந்தனைகள் நிலவும்போது, அச்செயல்கூறு அழைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். அந்த நிரல் தொடர் இயங்காத போதும், அதேபோன்ற நிபந்தனைகள் நிலவுமெனில், இயக்க முறைமையின் கருவகம் (kernel) ஒரு மென்பொருள் குறுக்கீட்டை நேரடியாக வழங்கி, அந்த நிரல் தொடரை இயக்கி அதிலுள்ள செயல் கூற்றையும் அழைத்துச் செயல்படுத்தும்.

asynchronous protocol : நேரச் சீரிலி நெறிமுறை : நேரச் சீரிலா முறையில் தகவல் அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு நெறிமுறை.