பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1020

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1019


N-type semiconductor

1019

null character

Committee) என்பதன் குறும்பெயர். இது ஒரு வண்ணத் தொலைக்காட்சித் தர நிருணய அளவு.

N-type semiconductor : என்-வகை குறைகடத்தி : மின்சாரக் கடத்தல் மின்னணு மூலம் நடைபெறும் குறைகடத்திப் பொருள். P-வகை குறை கடத்திகளில் மின்கடத்தல், துளைகள் (holes-electron vacancies) மூலம் நடைபெறுகிறது. மிகை மின்னணுக் கொண்ட மாசுப் பொருள் சேர்த்து N-வகைக் குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

.nu : .என்யு : ஒர் இணைய தள முகவரி நியூ (Niue) நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

nuBus : நுபஸ் : ஈரோகார் டினால் (9U) வரையறுக்கப்பட்டு ஆரம்பத்தில் எம்ஐடியில் உருவாக்கப்பட்ட 32- துண்மிதடைய வடிவமைப்பு. தடையத்திற்கான உரிமைகளை டி.ஐ. மற்றும் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனங்கள் வாங்கிவிட்டன. டி.ஐ.யிடமிருந்து ஆப்பிள் நிறுவனம் இதற்கான உரிமையைப் பெற்று இதன் மின்சார பருப்பொருள் வரையறைகளை மெக்கின் டோஷாக்காக மாற்றியது.

nucleus : உள்மையம் ; உட்கரு : ஒரு கட்டுப்பாட்டுச் செயல் முறையின் பகுதி. இது உள் முகச் சேமிப்புச் சாதனத்தில் அமைந்திருக்க வேண்டும்.

nudge shadow : தள்ளு நிழல்.

NUI : என்யுஐ : notebook user interface என்பதன் குறும்பெயர். கோ கார்ப்பரேஷன் தனது பேனா மற்றும் பாயின்ட் பேனா சார்ந்த இடைமுகத்திற் காக உருவாக்கப்பட்ட சொல்.

nuke அழி, முறி : 1. ஒரு கோப் பினை, கோப்பகத்தை அல்லது நிலைவட்டு முழுமையையும் அழித்தல். 2. ஒர் இயக்க முறைமையின், ஒரு பயன்பாட்டின் அல்லது ஒரு நிரலின் செயல்பாடு ஒன்றை நிறுத்தி வைத்தல்.

null : பயனிலா மதிப்பு : வெற்று மதிப்பு : மிக அற்பமான அல்லது தகவல் எதுவும் தராத ஒரு மதிப்பு. இது ஒரு எண்மான மதிப்பு, சொற்களுக்கிடை யிலான இடைவெளி போன்ற தகவல்களைக் குறிக்கும் ஒரு சுழி (பூஜ்யம்) அல்லது வெற்றிடத்திலிருந்து வேறுபட்டது.

null character : இல்லாத எழுத்து; வெற்று எழுத்து : ஒரு சேமிப்பகச் சாதனத்தின்