பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1021

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

null cycle

1020

number


வெற்றிடத்தை நிரப்பப் பயன்படுத்தப்படும் எழுத்து. ஒரு வரிசை எழுத்துகளிலிருந்து அந்த வரிசையில் பொருள் மாறாமல் அந்த எழுத்தை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

null cycle : பயனில் சுழற்சி; வெற்றுச் சுழற்சி : புதிய தரவு எதனையும் தராமல் ஒரு முழுச் செயல்முறையும் சுழல்வதற்குத் தேவையான நேரம்.

null instruction : பயனிலா ஆணை; வெற்று ஆணை.

null modem : வெற்று மோடெம் : அங்கே ஒரு மோடெம் இல்லா மலேயே தரமான மோடெம் குழாய்களைப் பயன்படுத்தி இரண்டு கணினிகளை இணைக்க அனுமதிக்கும் சாதனம். பெரிதாக்கல், குறிப் பேற்றம், குறிப்பிறக்கம் ஆகிய வற்றைப் பயன்படுத்தா மலேயே செய்யப்படும் தகவல் தொடர்பு இணைப்பு. குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெற்று மோடெம்கள் முறையைப் பயன்படுத்த முடியும். நேரடி இணைப்பைக் கருத்தில் கொண்ட மிகக்குறைந்த நீளமுள்ள நேரடி உலோக இணைப்பு தருவதாக சில சமயம் வெற்று மோடெம்கள் குறிப்பிடப்படுகின்றன.

வெற்று மோடெம் குழாய்

null modem cable : வெற்று மோடெம் குழாய் : மிக நெருக்க மாக உள்ள இரண்டு பர்சனல் கணினிகளை இணைக்கப் பயன் படுத்தப்படும் ஆர்எஸ்-232 - சி குழாய். தொடர் துறை (port) களை இணைப்பதுடன் ஒரு முனையில் அனுப்பும் கம்பி களையும் மறுமுனையில் பெறும் கம்பிகளையும் கடக்கிறது.

null pointer : வெற்றுச் சுட்டு : சுழியை (பூஜ்யத்தை) நிர லாக்கத் தொடரில் குறிப்பிடும் முறை. வெற்றிபெறாத, தேடும் பணியின் பதில்களாக இருக் கலாம்.

null string : வெற்றுச் சரம் : எழுத்து எதுவும் இல்லாத ஒரு சரம்.

null value : வெற்று மதிப்பு.

number : எண் வரிசை : 1. ஒரு குறிப்பிட்ட எண்மான முறை