பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1023

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

numerator

1022

numeric keypad



முறை : எண்களைக் குறித்திடும் முறை. பொதுவாக பதின்ம அல்லது பதின்மான இலக்க முறை பயன்படுத்தப்படுகிறது. இது தவிர பல்வேறு இலக்க முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஈரெண் முறை, பதினாறெண்முறை, எட்டெண் முறை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

numerator : பகுதி.

numerator/denominator : பின்ன எண் பகுதி/விகுதி.

numeric : எண் சார்ந்த : எண்கள் அல்லது எண் குறியீடுகள் தொடர்புடைய.

numerical analysis எண் முறைப் பகுப்பாய்வு : கணக்குகளுக்கு விடை காண்பதற்கான ஆக்கமுறை நடைமுறைகளை ஆராய்ந்து கண்டுபிடித்தல் தொடர்பான கணிதப் பிரிவு.

numerical control : எண்முறைக் கட்டுப்பாடு : வரிசையான இலக்கங்களை உட்செலுத்தி குறிப்பாகக் காகித நாடாவில் எந்திரங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு.

numerical expression : எண்மானக் கோவை.

numerical indicator tube : எண் முறைக் குறியீட்டுக் குழாய் : இலக்கங்களைக் காட்சியாகக் காட்டக்கூடிய ஒர் மின்னணு குழாய்.

numeric character : எண் எழுத்து : இலக்கத்தைக் குறிக்கிறது.

numeric coding : எண் குறியீட்டு முறை : தரவுகளையும் அறிவுறுத்தங்களையும் குறிப்பதற்கு எண்களை மட்டுமே பயன்படுத்தும் குறியீட்டு முறை.

numeric constant : எண் மாறிலி  : முழு எண்களை அல்லது மெய்ம்மை எண்களை மட்டுமே பயன்படுத்தும் செய்திக் குறிப்பு.

numeric data : எண் தரவு : கணக்கீடுகளைச் செய்யும்போது பயன்படுத்தப்படும் பண அளவுகள் மற்றும் பொருள் எண்ணிக்கைகளைக் குறிப்பிடுகிறது.

numeric field : எண் புலம் : எண்னியல் படிவம் : கணக்கிடப்பட வேண்டிய எண்களை மட்டுமே கொண்டுள்ள தரவுப் புலம்.

numeric keypad : எண்னியல் விசைத் திண்டு.