பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1025

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Oasis

1024

object database


O

Oasis : பாலைச்சோலை : பல நுண் கணினியமைவுகளில் பயன்படுத்தப்படும் பல பயனாளர் செயற்பாட்டுப் பொறியமைவு.

obey : பணிந்திணங்கு;கீழ்படி : ஒரு கணினி, தற்போது நிறைவேற்றப்படும் செயல்முறையினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல் மூலம் குறித்து உரைக்கப்படும் ஒரு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற செய்முறை.

object : பொருள்;இலக்கு;தகவமைவு : உருவாக்குபவருக்கு நிரலாக்கத் தொடர் பொருள்கள் திரும்பப் பயன்படுத்தக்கூடிய குறியீட்டுப் பிரிவுகள்.சக்கரத்தினை ஒவ்வொரு முறையும் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லாததுபோல் முந்தைய வேலையின் புதிய பயன்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றவை.இறுதிப் பயனாளருக்கு அவை திரைப்பொருள்கள் (ஐக்கான்கள்.கோப்புப் பெயர்கள், விரிதாள் வரிசைகள், சொற்கட்டங்கள் போன்றவை.இவைகளை பொருள்களைப் போன்று கையாள முடியும்.சான்றாக ஒரு கோப்பின் பெயரை அச்சுப்பொறி ஐகானுக்கு இழுத்து வந்தால் அக்கோப்பு அச்சிடப்படும்.

object attribute : பொருளின் பண்புக்கூறு.

object base : இலக்கு தளம்;பொருள் தளம்.

object code : இலக்குக் குறியீடு;இயக்கு நிரல்; இலக்குச் சங்கேதம்;இலக்கு நிரல் : ஒரு தொகுப்பானிலிருந்து அல்லது இணைப்பானி லிருந்து வரும் வெளிப்பாடு.இதுவும் நிறைவேற்றத் தக்க ஒரு எந்திரக் குறியீடாக அல்லது நிறைவேற்றத் தக்க எந்திரக் குறியீட்டினை மேலும் செய்முறைப்படுத்துவதற்குத் தக்கதாக அமைந்திருக்கும்.இதனை "இலக்குச் செயல்முறை" (object programme) என்றும் கூறுவர்.

object computer : இலக்குக்கணினி : ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கணினி.

object database management group : பொருள் நோக்கு தரவுத்தள மேலாண்மைக் குழு : பொருள்சார் தரவுத் தளங்களுக்