பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1027

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

object mode

1026

object -oriented database


ஆண்டு அமைக்கப்பட்டது.பொருள் மேலாண்மைக் கட்டுமானம் (object management architecture - OMA) என்கிற தரக்கோட்பாட்டையும் இது வரை யறுத்துள்ளது.பகிர்ந்தமை சூழல்களுக்குரிய தரப்படுத்தப்பட்ட பொருள் மாதிரியம் (object model) ஆகும் இது.

object model : பொருள் மாதிரியம் : சி++ போன்ற ஒரு பொருள் நோக்கு மொழிக்கான கட் டமைப்பு அடித்தளத்தைக் குறிக்கிறது.கருத்தியல்(abstraction), உடன்நிகழ்வு(concurrency), உறைபொதியாக்கம்(encapsulation), மரபுரிமம்(inherience), தொடர் நீட்டிப்பு (persistence), பல்லுரு வாக்கம்(polymorphism), வகைப்பாடு(typing) போன்ற கோட்பாடுகளைக் கொண்டது.

object modules : காட்சிப்பொருள் தகவமைவு : எந்திர மொழி நிரல் தொடர் அல்லது அத்தகைய நிரல் தொடரின் ஒரு பகுதி. இது ஒரு சேர்ப்பி அல்லது தொகுப்பியிலிருந்து வெளியீடாக வந்து, செயல்படுத்தப்படும் முன்பு இணைப்பு தொகுப்பாளரால் செயலாக்கப்படுவது.

object orientation : இலக்கு நோக்கிய; பொருள்சார்ந்த.

object oriented : பொருள் : சார்ந்த பொருள் பொருட்டு.

object-oriented analysis : பொருள் சார்ந்த ஆய்வு : ஒரு பிரச்சினையை ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்களின் குழுவாக மாதிரி அமைத்து சோதனை செய்தல்.ஒரு பொருளை அதன் வகுப்பு தரவு, பொருள்கள் மற்றும் நடத்தையை வைத்து வரையறை செய்யப்படும்.

object-oriented computer : பொருள் நோக்குக் கணினி.

object-oriented data base : பொருள் சார்ந்த தரவுத் தளம் : தெளிவற்ற தரவு வகைகளை (பொருள்கள்) வைத்திருக்கின்ற தரவுத் தளம்.ஒரு பொருள் சார்ந்த நிரல் தொடர் மொழியிலிருந்து பொருள்களை அது நேரடியாக சேமிக்க முடியும். எந்த வகையான தரவும் சேமிக்கப்படலாம். தரவு களை செயலாக்கம் செய்வதற்கான விதிகள் அப்பொருளிலேயே சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் பொருள்சார்பு தரவுத் தளங்கள் தரவு, சொற்கள், படங்கள், குரல் போன்ற எண்ணற்ற வகைப் பொருள்களை வைத்திருந்து அவற்றை எந்த வடிவிலும் மாற்றித் தரவல்லது.