பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1028

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

object-oriented DBMS

1027

object-oriented technology


object-oriented DBMS : பொருள் சார்ந்த டி.பி.எம்.எஸ் : பொருள் சார்ந்த தரவுத் தளத்தினை சமாளிக்கும் டி.பி.எம்.எஸ். தொடர்புடைய தரவுத்தள நிரல் தொடர்களில் செய்வதற்கு அரிதான, பொருள்களைப் பற்றிய சிக்கலான கேள்விகளையும் இது எளிதாகக் கையாளும்.

object-oriented design : பொருள் சார்ந்த வடிவமைப்பு : பொருள் சார்ந்த மாதிரி ஒன்றை அதனை உருவாக்கும் அமைப்புக்குத் தேவையான விளக்கக் குறிப்புகள் கொண்டதாக மாற்றுதல். நோக்கம் சார்ந்த ஆய்விலிருந்து பொருள்சார்ந்த வடிவமைப்புக்கு மாறுவது, அந்த மாதிரியமைப்பை விரிவாக்கி மேலும்மேலும் விவரம் சேர்ப்பதன்மூலம் செய்து முடிக்கப்படுகிறது.

object-oriented development : பொருள்நோக்கு மேம்பாடு.

object-oriented graphics : பொருள் சார்ந்த வரைகலை.

object-oriented interface : பொருள் சார்ந்த இடைமுகம் : ஐக்கான்கள், சுட்டி போன்றவற்றைப் பயன்படுத்துகின்ற வரைகலை இடைமுகம். மெக்கின்டோஷ், விண்டோஸ் போன்ற பணிச் சூழல்களை இவ்வாறு கூறலாம்.

object oriented language : பொருள் நோக்கம் சார்ந்த மொழி : பொருள் நோக்கம் சார்ந்த நிரல் தொடர் மொழி.தரவு செயலாக்கப் பணிகளுக்குப் பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்தும் நிரல் தொடர் மொழி.

object-oriented operating system : பொருள் நோக்கு இயக்க முறைமை : பொருள் அடிப் படையிலான இயக்கமுறைமை.பொருள்நோக்கு வடிவாக்க முறையில் அயலர்கள் மென்பொருள்கள் உருவாக்குவதற்கு உகந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும்.

object oriented programming : பொருள் சார்ந்த செயல்முறை வரைவு : தரவுப் பொருள்களின் ஒரு தொகுதியை மையமாகக் கொண்டுள்ள செயல்முறைப்படுத்தும் அணுகு முறை.இது, தரவுக்கும் குறியீட்டுக்கும் வெவ்வேறு அணுகு முறையைக் கையாளும.

object oriented programming languages : பொருள் நிரலாலாக்க மொழிகள்.

object-oriented technology : பொருள் சார்ந்த தொழில் நுட்பம் : உலக நடைமுறைகளாகப் பார்க்காமல் பொருள்களாகப் பார்க்கின்ற வாய்பாடு.