பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1031

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

octal, binary coded

1030

odometer


அடிப்படையாகக் கொண்டிருக்கும்.எண்மி எண்களில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள், 0, 1, 2, 3, 4, 5, 6, 7.

octal, binary coded : இருமக் குறிமுறை எண்மம்.

octal point : எண்மிப் புள்ளி : எண்மப் புள்ளி : ஒரு கலப்பு எண்மி எண்ணில் முழுஎண் பகுதியைப் பின்னப் பகுதியிலிருந்து பிரித்துக் காட்டும் மூலப்புள்ளி, 72.24 என்ற எண்மி எண்ணில் எண்மி புள்ளி இரு எண்களுக்கு மிடையில் உள்ளது.

octet : எண்மி : எட்டுத் துண்மிகளைக் (bits) கொண்ட எட்டில்.

ΟCΧ : ஓசிஎக்ஸ் : ஓஎல்இ கஸ்டம் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம்.ஓஎல்இ மற்றும் காம் தொழில் நுட்பம் இரண்டும் இணைந்த மென்பொருள் கூறு. ஒரு மென்பொருள் பயன்பாடு அழைக்கும்போது, அந்தப் பயன்பாட்டுக்கு விரும்புகின்ற சில பண்புக் கூறுகளை அளிக்கும் ஒரு கட்டுப்பாட்டினை இது உருவாக்கித் தருகிறது.ஓசி எக்ஸ் தொழில்நுட்பம் வேறுபட்ட பணித்தளங்களில் செயல்பட வல்லது. 16-பிட், 32 பிட் இயக்க முறைமைகளிலும், பல் வேறுபட்ட பயன்பாடுகளிலும் பயன்படுத்தவல்லது. விசுவல் பேசிக் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடிந்த விபிஎக்ஸ் (Visual Basic Custom Control) தொழில்நுட்பத்தின் வாரிசாக வந்தது.ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்பத்தின் அடிப் படையாக விளங்குவது.ஓசி எக்ஸ்-கள் விசுவல் சி++ மொழியில் எழுதப்பட்டாலும் வேறு பல மொழிகளிலும் எழுத முடியும்.1996 ஒஎல்இ கன்ட்ரோல் வரன்முறையில் இடம் பெற்றுள்ள ஒசிஎக்ஸ் தொழில் நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ODBC : ஓடிபிசி : திறந்த தரவுத்தள இணைப்புநிலை என்று பொருள்படும் Open Database Connectivity என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பிணையத்திலுள்ள ஒரு தரவுத் தளத்தை விண்டோஸ் பயன்பாடுகள் அணுகுவதற்கு ஒரு பொதுவான வழிமுறையை வழங்கும் இடைமுகம் ஆகும்.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் உருவாக்கியது.

ODBC Data sources : ஒடிபிசி தரவு மூலங்கள்.

odd pariy check : ஒற்றைப்படைச் சரிபார்க்கும் முறை.

odometer : ஓடோமீட்டர் : தூர இடைவெளியைப் பதிவு செய்