பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1033

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

off screen formatting

1032

offline processing


இத்தகைய அலுவலகத்தில் பெரும்பாலான எழுத்தர் செயலக செய்தித் தொடர்புப் பணிகள் தானியக்க முறையில் நடைபெறும்.

off screen formatting : திரையில் முறைப்படுத்துதல்.

off state : விடுப்பு நிலை.

office support systems : அலுவலக ஆதரவு அமைப்புகள் : பலதரப்பட்ட கணினி ஆதரவு சேவைகளை ஒருங்கிணைக்கும் அலுவலக தானியங்கி அமைப்புகள்.மேசை அச்சு இணைப்பு கள் மின்னணு அஞ்சல் மற்றும் மின்னணு பணி மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.

office vision : ஆஃபீஸ் விசன்;அலுவலகப் பார்வை : எல்லா ஐபிஎம் குடும்பக் கணினி களிலும் செயல்படுகின்ற ஒருங்கிணைந்த அலுவலக தானியங்கிப் பயன்பாடுகள்.எஸ்.ஏ.ஏ. வினை பேரளவில் அமல்படுத்துவதில் அதுவே முதல் முயற்சி.பிரசன்டேஷன் மேனே ஜரை அது உள்ளடக்கியது.1989இல் அறிமுகப்படுத்தப் பட்ட இதில் மின்அஞ்சல், பட்டியலிடல், ஆவண உரு வாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற்றுடன் முடிவெடுக்க ஆதரவு, வரைகலை பயன்பாடுகளும் அனைத்துப் பயனாளருக்கும் கிடைக்கும்.

offline : மறைமுகமாக : நேர் தொடர்பிலா; உடனடியற்ற முறை;பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் இணைக்கப் பட்டிராத சாதனம் பற்றியது மாகும்.இது "நேரடியாக" (online) என்பதற்கு மறுதலை.

offline navigator : அகல்நிலை வழிச்செலுத்தி : அகல்நிலை திசைச்செலுத்தி : இணையத்திலிருந்து மின்னஞ்சல், வலைப் பக்கங்கள், செய்திக்குழுக் கட்டுரைகள் அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களி லுள்ள கருத்துரைகள் இவற்றைப் பதிவிறக்கம் செய்து, நமது கணினியிலுள்ள வட்டில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னொரு சமயத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே அவற்றைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள்.இணைய இணைப்புக்காக ஆகும் செலவு இதனால் மிச்சப்படுகிறது.

offline processing : பின் தொடரும் செயலாக்கம்.