பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1035

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

OLAP database

1034

OLTP


OLAP database : ஓஎல்ஏபீ தரவுத் தளம் : நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயலாக்க தரவுத் தளம் என்று பொருள்படும் Online Analytical Processing Database என்பதன் சுருக்கம்.வழக்க மான உறவுநிலைத் தரவு தளங்களைவிட அதிக சிக்கலான வினவல்களைக் கையாளும் திறன் படைத்த ஓர் உறவுநிலைத் தரவுத தளம் தரவுகளை பல பரிமாண முறையில் அணுக முடியும். அதாவது தரவுகளை பல்வேறு தேர்வு விதிகளின் அடிப்படையில் பார்வையிட முடியும்.மிகவும் தீர்க்கமான கணக்கீட்டுத் திறன் உண்டு.சிறப்புத் தன்மை வாய்ந்த கட்டு வரிசை (indexing) நுட்பங்கள் உள்ளன.

OLE : ஓஎல்இ;ஓலே : பொருள் தொடுப்பும் உட்பொதிப்பும் என்று பொருள்படும் (Object Linking and Embedding stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பயன்பாட்டு மென்பொருள்களுக்கிடையே தரவுவைப் பரிமாறிக் கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கு மான ஒரு தொழில் நுட்பம்.படம் வரையும் மென்பொருள் கொண்டு ஒரு படம் வரையப்பட்டுள்ளது.அது ஒரு படிமக்கோப்பில் சேமிக்கப்பட்டுள்ளது.சொல்செயலி மென்பொருளில் உருவக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் படிமக்கோப்புக்கான தொடுப்பு உருவாக்கப் பட்டுள்ளது எனில், படமானது ஆவணத்தின் ஓர் அங்கமாகவே தோற்றமளிக்கும்.தொடுப்புள்ள படத்தில் செய்யப்படும் மாறுதல்கள் ஆவணத்தி லுள்ள படத்திலும் பிரதிபலிக்கும்.இதனையே "பொருள் தொடுப்பு என்கிறோம்.படத்தை நகலெடுத்து ஆவணத்தில் ஒட்டிவிடுவதை பொருள் உட்பொதிப்பு என் கிறோம்.மூலப்படத்தில் செய்யப் படும் மாறுதல்கள் ஆவணப்படத்தில் பிரதி பலிக்காது.படத்தை மீண்டும் உட்பொதிக்க வேண்டும்.

OLTP : ஓஎல்டீபீ : நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கம் என்று பொருள்படும் (Online Transaction Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பில், தரவுகள் உள்ளீடு செய்யப்பட்ட உடனேயே அவை பரீசீலிக்கப்பட்டு முதன்மைக் கோப்புகளின் தரவுகள் புதுப்பிக்கப் பட்டுவிடும்.நிதியக் கணக்கு வைப்புகளுக்கும், சரக்குக் கையிருப்பு மேலாண்மைக்கும் ஓஎல்டிபீ மிகவும் பயனுள்ளது.