பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1037

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

one address

1036

one-off


one address : ஒற்றை முகவரி.

one-address computer : ஒரு முகவரிக் கணினி : தனது நிரலைப் படிவமைப்பில் ஒரே யொரு முகவரியை மட்டுமே பயன்படுத்தும் கணினி.எடுத்துக்காட்டு : "ADD x" என்பதில் அறிவுறுத்தத்திலுள்ள முகவரியை 'X' குறிக்கிறது. இது இரு முகவரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.இதனை நான்கு முகவரிக் கணினியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

one-address instruction : ஒரு முகவரி அறிவுறுத்தம் : ஒரு நிரலையும் ஒரேயொரு முகவரியையும் கொண்டுள்ள நிரல்.சில தனி நேர்வுகளில், ஓர் ஒற்றை முகவரிக் கணினியின் நிரல் குறியீடானது, சுழி (பூஜ்யம்) , பன்முக முகவரி நிரல்கள் இரண்டையும் கொண்டிருக்கும். இன்றுள்ள கணினிகளில் பெரும்பாலானவை ஒரு முகவரி நிரலையைக் கொண்டவை.

one-chip computer : ஒரு சிப்புக் கணினி.ஒரேயொரு சிப்பில் இயக்கப்படுகிற முழுமையான நுண்கணினி.இது "சிப்பு இயக்கக் கணினி" என்றும் அழைக்கப்படுகிறது.

one-dimensional array : ஒற்றைப் பரிமாண வரிசை : மின்வாய்க் கம்பிகளின் ஒற்றை வரிசையை அல்லது பத்தியைக் கொண்ட வரிசை முறை.

one for-one : ஒன்றுக்கு ஒன்று : சேர்ப்பியுடன் பெரும்பாலும் இணைத்துக்கூறும் சொற்றொடர். ஒரு மூலமொழி சொற்றொடர் வேறொரு எந்திர மொழி நிரலாக மாற்றப்படும்.கடிதப் போக்கு வரத்தில் அதிகமாகப் பயன்படும் வகை.

one gate : ஒரு வாயில்.

one-level memory : ஒரு நிலை நினைவகம் : ஒரே மாதிரியான செயல்முறை மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள இனங்கள் அனைத்தையும் அணுகக்கூடிய நினைவகம்.

one line function செயல்கூறு.

one-off : ஒன்றுமட்டும் : 1.ஒரு பொருளை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தயாரிக்கும் முறைக்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒன்று என்ற முறையில் தயாரிப்பது.2.சிடி ரோம் எழுதும் பொறி ஒன்றில் ஒரு நேரத்தில் ஒரு நகல் மட்டுமே உருவாக்கும் முறை.

one-out-of-ten-code : பத்தில் ஒன்று குறியீடு : இந்தக் குறியீட்டு முறையில், ஒரு பதின்ம இலக்கமானது 10 இரும இலக்