பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1038

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

one-pass compiler

1037

online community


கங்களால் குறிக்கப்படுகிறது;இவற்றில் 10 இரும இலக்கங்களில் ஒரேயொரு இலக்கம் மட்டுமே "ஒன்று" இலக்கமாக இருக்கும்.

one-pass compiler : ஒற்றை ஓட்டத் தொகுப்பி : ஒரே சமயத்தில் ஓர் ஆதார மொழிச் செயல்முறையில் ஓடி, ஓர் இலக்குத் தகவமைவை உண்டாக்கும் மொழிச் செயல்முறைப்படுத்தி.

one's complement : ஒன்றின் குறை நிரப்பு எண் : ஒரு குறிப்பிட்ட மதிப்பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம்.ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஓர் இரும இலக்க மாகும்.இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ்வொரு துணுக்கின் துணுக்கு வரிசைமுறையை மாற்று வதன் மூலம் பெறப்படுகிறது.எடுத்துக் காட்டு 01100101 என்பது 10011010 என்ற ஈரிலக்கத்தின் ஒன்றின் குறைநிரப்பு எண்.இரண்டின் குறை நிரப்பு எண், ஒன்பதின் குறை நிரப்பு எண், பத்தின் குறைநிரப்பு எண் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்திடுக.

ongoing activity : நடப்பு/நடவடிக்கை.

on-hook : கொக்கி மீது : வருகின்ற தொலைபேசி அழைப்புகளைப் பெறுகின்ற ஒரு தொலைபேசிக் கம்பி.off-hook என்பதற்கு மாறானது.

onion diagram : வெங்காய வரைபடம் : ஒரு அமைப்பினை வரைபட முறையில் குறிப்பிடுவது. குழி வட்டங்களாகக் காட்டப்படுகிறது.வட்டத்தின் உள்ளே வட்டங்களாக அமைத்து, இறுதி உள்வட்டமே மையமாகும்.மற்ற வெளிவட்டங்கள் அதைச் சார்ந்து இருப்பவை.

online : நேரடியாக : உடனடி முறை;உடன் நிகழ்வு : ஒரு கணினியின் மையச் செயலகத்துடன் நேரடித் தொடர்புடைய கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள சாதனம் பற்றிய தாகும்.இது மறைமுகமாக" (offline) என்பதற்கு மறுதலை.

online analytical processing : நிகழ்நிலைப் பகுப்பாய்வுச் செயலாக்கம்.

online application : நேரடிப் பயன்பாடுகள்.

online banking : நிகழ்நிலை வங்கிமுறை.

online community : நிகழ்நிலைச்சமூகம் : 1. இணைய மற்றும்