பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ΑΤΑΡΙ

103

ATM Forum


உதவியாளர் கிளிப் ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கமுறைக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதச் சிக்கல்களுக்குக் கணினியில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.

ΑΤΑΡΙ : அட்டாப்பி : குறுவட்டுச் சாதனங்களைக் கையாள, ஐபிஎம் பிசி ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்படும் இடைமுகச் சாதனம்.

Atari : அட்டாரி : தனியார் கணினிகள் மற்றும் இணைப்புச் சாதனங்கள் வரிசையில் புகழ்பெற்ற நிறுவனம். தொடங்கியதிலிருந்தே அமெரிக்க நிறுவனமாக உள்ளது.

at birth : பிறக்கும்போது.

AT bus : ஏடீ மின்வழித்தடம் : ஏ.டீ மின்பாட்டை : ஐபிஎம் ஏடி மற்றும் அதன் ஒத்தியியல்புக் கணினிகளில் தாய்ப்பலகையுடன் புறச் சாதனங்களை இணைக்கும் மின்வழித் தடம். முன்பிருந்த பீசி மின்பாட்டை 8 துண்மி (பிட்) களையே ஏந்திச் செல்லும். ஏ.டீ மின் பாட்டையில் 16 துண்மிகள் (பிட்கள்) ஒருசேரப் பயணம் செய்ய முடியும். இது விரிவாக்க மின் பாட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

at death : இறக்கும்போது.

ATDP : ஏடிடிபீ : எண் சுழற்றுத் துடிப்புகளைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Pulse என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் துடிப்புமுறை எண் சுழற்றலைத் தொடக்கி வைக்கும் கட்டளை.

ATDT : ஏடிடிடீ : எண்சுழற்று ஒலியைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Tone என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் ஒலிமுறை எண் சுழற்றலைத் தொடங்கி வைக்கும் கட்டளை.

atlas : அட்லாஸ் : டிரான்சிஸ்டர்களை வைத்து உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் புகழ்பெற்றது.

ATM : ஏடிஎம் : 'தன்னியக்கப் பணப் பொறுப்பு எந்திரம்' எனப் பொருள்படும். Automatic Teller Machine என்பதன் குறும்பெயர்.

ATM Forum : ஏடிஎம் மன்றம் : 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் கணினித்துறை சார்ந்த 750 குழுமங்கள், அரசு முகமைகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள்