பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1041

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

open access

1040

Open Financial Connectivity


ஆவணத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கான செய்முறை.

open access : திறந்த அணுகுமுறை : "சாஃப்வேர் புராடக்ட்ஸ் இன்டர்நேஷனல்" நிறுவனத் தின் டிரேட் மார்க்.

open an existing database : இருக்கும் தரவுத் தளத்தை திற.

open architecture : வெளிப்படை கட்டமைப்பு : திறந்த கட்டமைப்பு : ஒரு அமைப்பின் விளக்கக் குறிப்புகள் வெளிப்படையாகக் குறிப்பிடப்படுவது. தனியார் விற்பனையாளர்கள் கூடுதல் பொருள் களை உருவாக்க இதன் மூலம் ஊக்குவிக்கப் படுகிறது.

open command : திற ஆணை.

open containing folder : உள் கொண்ட கோப்புறை திற.

open data base : தரவுத் தளத்தைத் திற.

open doc : ஓப்பன்டாக் : பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) .வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட வழி பிற கோப்புகள் ஆகியவற்றை உட்பொதித்து அல்லது தொடுப் பேற்படுத்தி ஆவணம் உருவாக்க ஓப்பன் டாக் அனுமதிக்கிறது.ஆப்பிள், ஐபிஎம், ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப் மற்றும் எக்ஸ்கன்சோர்ட்டியம் ஆகியவை இணைந்த கூட்டணி ஓப்பன் டாக்கை ஆதரிக்கிறது.

open ended : திறந்த நிலையான : திறந்த முனையுடைய : மூலப்பொறியமைவைப் பாதிக்காமல் புதிய செயல் முறைகள், நிரல்கள், துணை வாலாயங்கள், மாற்றமைவுகள், வகைப்பாடு கள், வரையீடுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை.

open file : திறந்தநிலைக் கோப்பு : திறந்த கோப்பு : படிப்பதற்கு எழுதுவதற்கு அல்லது இரண்டுக்கும் அணுகத் தக்க கோப்பு.இது மூடிய கோப்பிலிருந்து (closed file) வேறுபட்டது.

Open Financial Connectivity : திறந்தநிலை நிதியியல் இணைப்பு : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வகுத்துள்ள வரன்முறை.மின்னணு வங்கிச் சேவைகளுக்கும் மைக்ரோ