பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1042

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

open group

1041

open software foundation


சாஃப்ட் மணி (Microsoft Money) என்னும் சொந்த நிதி மென்பொருளுக்கும் இடையேயான ஓர் இடைமுகம் ஆகும்.

open group : ஓப்பன் குரூப்;திறந்தநிலைக் குழு : கணினித் துறையில் வன்பொருள், மென் பொருள் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் ஆகி யோர் இணைந்த ஒரு கூட்டமைப்பு.பல தரப்பட்ட விற்பனையாளர்களின் தரவு அமைப்பை வளர்த் தெடுப்பதே இதன் நோக்கம்.1996இல் ஓப்பன் குரூப் நிறுவப்பட்டது.ஓப்பன் சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் மற்றும் எக்ஸ்/ஓப்பன் கம்பெனி லிமிடெட் இரண்டும் இணைந்து இக்கூட்டமைப்பு உருவானது.

opening a file : கோப்புத் திறத்தல்.

opening menu : திறப்புக்கட்டளைப் பட்டியல்.

open loop : திறந்த வட்டம்;திறந்த வளையம் : செயலாக்கக் கட்டுப்பாடு அல்லது வழங்கு எந்திர அமைப்பில் மூத்த அல்லது கட்டுப்பாட்டுக் கருவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு செய்தியைக் கணினி அச்சிடும் அமைப்பு.

open message : திறந்தச் செய்தி;வெளிப்படைச் செய்தி.

open MPEG consortium : ஓப்பன்எம்பெக் கூட்டமைப்பு : எம்பெக் தரவரையறைகளை பயன்பாட்டில் மிகுவிப்பதை நோக்கமாகக் கொண்ட, வன்பொருள், மென்பொருள் தயாரிப் பாளர்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு.

open option : சிறந்த விருப்பத் தேர்வு.

open plan : வெளிப்படை திட்டம் : தனி அலுவலகங்களாக உருவாக்குகின்ற உட்பகுதிச் சுவர்கள் அதிகம் இல்லாமல் உருவாக்கப்படுகின்ற அலுவலக வடிவமைப்பு.தடுப்புகள் மற்றும் அலுவலக ஃபர்னிச்சர்களைப் பயன்படுத்தி பணி இடங்கள் உருவாக்கம்.

open shop : திறந்த நிலைக் களம் : ஒரு கணினி வசதியின் செயற்பாடு.இதில் பெரும் பாலான ஆக்கமுறைச் சிக்கல் செயல்முறைப் படுத்துதல்களும் ஒவ்வொரு செயல்முறைப் படுத்தும் வல்லுநர் குழுமத்தினால் அல்லாமல் ஒவ்வொரு சிக்கல் ஒழுங்கியக்குநரால் செய்யப்படுகிறது.இது முடிவுற்ற களம் (closed shop) என்பதற்கு மாறுபட்டது.

open software foundation;திறந்த நிலை மென்பொருள்கழகம்.


66