பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1046

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

operator

1045

operator precedence


படுத்தப்பட்டது.இவ்வாய்வு முறை உயிர்நாடிப் பாதைமுறை (Critical Path Method) , புள்ளியியல் (Statistics) , நிகழ்தகவியல் (Probability) , தரவுக் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

operator இயக்கர்;செய்முறைக் குறி : 1. இயக்கப்படும் எண்களின்மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையைக் குறித்துக் காட்டுகிற ஒரு செய்முறை.2.ஓர் எந்திரத்தை இயக்குகிற ஆள்.

operator associativity : செயற்குறி இணைவு : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒரே முன்னுரிமை யுள்ள இரண்டு செயற்குறிகள் எந்த வரிசையில் செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக் கும் செயற்குறிகளின் பண்புக்கூறு.இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ இருக்க லாம்.பெரும்பாலான செயற்குறிகளின் இணைவு இடமிருந்து வலமாக இருக்கும்.சி-மொழியில் சில செயற்குறிகள் வலமிருந்து இடமாகச் செயல் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

operator, machine : பொறிச் செயல்பாட்டாளர்; பொறிஇயக்குநர்.

operator overloading : செயற்குறிப் பணி மிகுப்பு : ஒரு குறிப்பிட்ட செயற்குறி, ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் செயல்படும் எனில் அதனைப் பணி மிகுப்பு என்கிறோம்.எடுத்துக்காட்டாக, என்னும் கணக்கீட்டுச் செயற்குறி இரண்டு எண்களைக் கூட்டப் பயன்படும்.அதனையே இரண்டு சரங்களை (strings) இணைக்கப் பயன்படுத்துவோம் ("Good" + "Morning.") எனில், இதனைச் செயற்குறி பணி மிகுப்பு என்கிறோம். இங்கே என்னும் அடையாளம் இருபுறமும் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் தரவு இன (Data Type) அடிப்படையில் செயல்படும்.அடா, சி++, சி# மொழிகள் செயற்குறிப் பணிமிகுப்பை அனுமதிக் கின்றன.சி, ஜாவா போன்ற மொழிகள் இக் கருத்துருவை (concept) அனுமதிக்கவில்லை.

operator precedence : செயற்குறி முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் இடம் பெறும்போது, அவை எந்த வரிசையில் இயக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை.அதிக முன்னுரிமை உள்ள செயற்குறி முதலில் செயல்படுத்தப்படும். எடுத்துக்