பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1047

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

optacon

1046

optical communication


காட்டாக, 5x4 : 3 என்ற கணக்கீட்டில் முதலில் 5x4 செயல்பட்டு 20 ஆகும்.பிறகு 20+3 செயல்பட்டு 23 ஆகும்.544x3 என்று இருப்பின் முதலில் 4x3=12 ஆகிப் பின் 5+12=17 ஆகும்.பொதுவாக x, 1 ஆகியவை முதலிலும், ஆகியவை அடுத்தும் செயல்படுத்தப்படும்.ஆனால், கணக்கீட்டுத் தொட ரில் பிறை அடைப்புக்குறிகள் இருப்பின் அவற்றுள் இருக்கும் கணக்கீடே எல்லாவற்றுக்கும் முன்பாகச் செயல்படும்.5x (4+3) என்று இருப்பின் 4+3=7 ஆகிப் பிறகு 5x7-35 ஆகும்.

optacon : ஆப்டாக்கோன் : கண் பார்வையற்றவர்கள் " படிப்பதற்கு" உதவும் ஒரு சாதனத்தின் வணிகப் பெயர்.இது ஓர் ஒளிக்கற்றையிலிருந்து வரும் துடிப்புகளை எழுத்துகளின் வடிவங்களாக மாற்றுகிறது. பார்வையற்றவர்கள் எழுத்துகளைத் தடவிப் பார்த்துப் படிக்கலாம்.

optical character : ஒளியியல் எழுத்து : ஒளியியல் உரு : ஓர் ஒளியியல் எழுத்துப் படிப்பி மூலம் படிக்கக்கூடிய ஒரு தனிவகை எழுத்து.

optical character recognition : ஒளிவ எழுத்து உணர்வு : தாளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்து களை அவற்றின் இருள், ஒளித் தோரணிகளை ஆய்வு செய்து அவ்வெழுத்துகளின் வடிவ மைப்பைத் தீர்மானிக்கும் ஒரு மின்னணுச் சாதனத்தின் செயல்பாடு.வருடுபொறி அல்லது படிப்பி எழுத்துகளின் வடிவத்தைத் தீர்மானித்த பிறகு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துகளுடன் தோரணியை ஒப்பீடு செய்யும் எழுத்துணர் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அவை கணினி எழுத்துகளாக மாற்றப்படுகின்றன.இதன் பயன் என்னவெனில், ஏற்கெனவே அச்சிடப்பட்ட ஆவணங்களை வருடி அவற்றைக் கணினி ஆவணமாக மாற்றுவதுடன், உரைப்பகுதியை மாற்ற, திருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

optical communication : ஒளியியல் செய்தித் தொடர்புகள்;ஒளியியல் தொடர்புகள் : தரவுகள், படங்கள், உரைகள், பிற செய்திகள் ஆகியவற்றை ஒளி மூலம் அனுப்புதல்.அனுப்பீட்டுக் கருவியி லிருந்து புறப்படும் ஒளியலைக் குறியீட்டினைத் தாங்கிச் செல்லும் ஒரு தரவு, ஓர் ஒளியியல் கால் வழியே சென்று, ஓர் அலை வாங்கியில் நுழை கிறது.அந்த