பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1048

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

optical computer

1047

optical fiber


அலைவாங்கி, மூலத்தரவுவை மறுகட்டமைப்புச் செய்கிறது. ஒளியியல் இழைகள், லேசர்கள் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ளன. இவை தரவு அனுப்பீட்டுத் திறம்பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்த உதவுகின்றன.

optical computer : ஒளிக் கணினி : செய்திகளைச் செயலாக்க கம்பிகளுக்குப் பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தும் ஒரு வகைக் கணினி. இன்னும் இது பரிசோதனையில் மட்டுமே உள்ளது.மரபு வழியிலான கம்பியிணைப்பு கணினிகளை விட இது மிகவும் வேகமாக வேலை செய்கிறது.

optical data storage divice : ஒளிவ தரவு சேமிப்புச் சாதனம்.

optical disk : ஒளியியல் : ஒளி வட்டு.

optical drive : ஒளிவ இயக்ககம் : ஒளிவ (குறு) வட்டுகளில் எழுதவும், படிக்கவும் முடிகிற ஒரு வட்டு இயக்ககம்.சிடி ரோம் வட்டியக்ககம், மற்றும் வோர்ம் வட்டியக்ககங்களை எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

ஒளிவ இயக்ககம்

optical fiber : ஒளியியல் இழை ; ஒளியிழை : மின்னியல் அனுப்பீட்டு கம்பி வடம். இது மிக உயர்ந்த அளவு ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி இழையினால் ஆனது. இருமக் குறியீடுகளின் ஒரு கற்றையைக் கொண்டு செல்லும் வகையில் இதற்கு மிக விரைவான துடிப்பூட்டம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த ஒளியியல் இழைகள் மிகப்பெருமளவு தரவுகளைக் கொண்டு செல்ல வல்லவை; அத்துடன், மரபு இழைகளைச் சீர் குலைக்கக் கூடிய மின்னியல் குறுக்கீடுகளையும் தடுக்கிறது. கணினிச் செய்தித்தொடர்புகளில் ஒளியியல் இழைகளின் பயன்பாடு இப்போது மிகவும் பெருகியுள்ளது.