பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1049

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

optical fiber cable

1048

optical reader wand


optical fiber cable : ஒளியிழை வடம்; இணைப்பு ஒளியிழை வடம் : கண்ணாடி இழை வடம்.

optical imaging technique : ஒளிவக் காட்சி நுட்பம்.

optical laser disk : லேசர் ஒளி வட்டு.

optical mark reader : ஒளிவம் குறி படிப்பி; ஒளியியல் குறியெழுத்துப் படிப்பி : அட்டை களில் அல்லது பக்கங்களில் உள்ள வரைகலைக் குறி யெழுத்துகளைப் படிக்கக் கூடிய உட்பாட்டுச் சாதனம்.

optical mark recognition (OMR) : ஒளியியல் குறியெழுத்தேற்பு : ஒளியியல் குறியறிதல்; (ஓஎம்ஆர் : ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு குறியெழுத்தை இருத்தி வைப்பதன்மூலம் கணினிப்பொறி உட்பாட்டுக்காகத் தரவுகளை இன்னொரு ஊடகமாக மாற்றுவதற்குரிய தகவல் செய்முறைப்படுத்தும் தொழில்நுட்பம்.இந்த நிலை ஒவ்வொன்றும் கணினிப்பொறிக்குத் தெரிந்திருக் கிற ஒரு மதிப்பினைக் கொண்டிருக்கும்.அந்த மதிப்பு மனிதரால் அறியக் கூடியதாகவோ அல்லது அறிய முடியாததாகவோ இருக்கலாம்.இது ஒளியியல் எழுத்தறிதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.

optical merge tree : உகந்த இணைப்பு மரம்; உகப்பு இணைவு மரம் : இயக்கச் செயற்பாடுகள் மிகக் குறும எண்ணிக் கையில் நிகழும் வகையில் சரங்களை இணைக்கிற வரிசை முறையினை மரவடிவில் உருப்படுத்திக் காட்டுதல்.

optical mouse : ஒளிச்சுசுட்டி : எலி வடிவ ஒளிக்கருவி : அதன் அசைவுகளுக்கு ஒளியைப் பயன்படுத்தும் எலி வடிவக் கருவி.இது ஒரு சிறிய மேசை மேல் உள்ள அட்டையின் மேற்பகுதியில் நகர்த்தப்படுகிறது.ஒரு ரெஃப்ளெக்டிவ் கிரிட் உள்ளது.எலி வடிவக் கருவி ஒரு ஒளியை வெளியிட்டு அது நகரும்போது ஏற்படும் மாற்றங் களைக் கண்டுபிடிக்கிறது.

optical page reader : ஒளியியல் பக்கப் படிப்பி : வாசகம் அச்சிடப்பட்ட ஒரு பக்கத்தை படித் தறிகிற உட்பாட்டுச் சாதனம்.

optical printer : ஒளியியயல் அச்சுப் பொறி.

optical reader : ஒளியியல் படிப்பி.

optical reader wand : ஒளியியல் படிப்பி கோல் : பட்டைக் குறியீடுகளைப் படித்து கணினிக்குள் உரிய தரவுகளைச் செலுத்துகிற சாதனம்.