பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1053

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.org

1052

OR gate


இது x -அச்சிலிருந்து (மட்டாயம்) வேறுபட்டது.

.Org ஆர்க் ஓ.ஆர்ஜி : இணையத்தின் களப்பெயர் அமைப்புமுறையில் உயர்நிலைக் களங்களுள் வணிக, கல்வி நிறுவனம் அல்லாத, ஆதாயநோக்கில் செயல்படாத நிறுவன அமைப்புகளைச் சுட்டும் பெயர்.வணிக அமைப்புகள் .காம் (com) என்ற பெயரையும், கல்வி நிறுவனங்கள் இடியு (.edu) என்ற பெயரையும் கொண்டுள்ளன.கணித்தமிழ் சங்கம் வணிக நிறுவனமோ, கல்வி நிறு வனமோ அல்ல. எனவே அதன் பெயர் www. kanithamizh.org என அமைந்துள்ளது.

              0 or 0 = 0
              0 or 1 = 1
              1 or 0 = 1
              1 or 1 = 1

organisation file : கோப்பு ஒழுங்கமைப்பு.

organise favourites : கவர்வுகளை ஒழுங்குபடுத்து.

organiser : அமைப்பாளர்.

organization : சீர்மை சேமிப்பமைப்பு.

organizational control : அமைவனக் கட்டுப்பாடு : தகவல் பொறியமைவை ஊடுருவல், குறுக்கீடு, நாசவேலை போன்ற வற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்படும் அலுவலர் நிருவாக நடைமுறைகள்.

organization chart : அமைவன வரைபடம் : ஒரு வணிக நிறுவனத்திலுள்ள பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் அமைப்புமுறை விளக்க வரைபடம். அமைவனப் படிநிலை அமைப்பின் பட விளக்கம். இது ஓர் அமைவனத்தின் பணியாளர்களிடை யிலான உறவு சார்ந்த நிலையைக் காட்டுகிறது.

OR gate : அல்லது வாயில்;அல்லது வழி : உட்பாடுகள் இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் இருமமாக இருக்குமானால் உட்பாடு ஓர் இரும 1 ஆக இருக்கிற இருவிசைகளைக் கொண்ட கணினி மின் சுற்று வழி.இது "அல்லது இயக்கியை" (OR operator) இயக்குகிறது.

orginal data : தோற்றுவாய்த் தரவு : மூலத் தரவு : செய்முறைப்படுத்த வேண்டிய தரவு.இது, "செப்ப மற்ற தரவு" (Raw data) என்றும் அழைக்கப்படும்.

orientation : ஆற்றுப்படுத்தல்.