பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1056

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oscillate

1055

oscillator


மைக்ரோசாஃப்ட் விலகிக் கொண்டது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் (pro- tected mode) செயல்படும். மெய்நிகர் நினைவகம் கொண்ட பல் பணியாக்க இயக்க முறைமைஇன்டெல் 80286, 80386, +i486 மற்றும் பென்டியம் பிராசாசர்கள் கொண்ட சொந்தக் கணினிகளில் செயல்படவல்லது. பெரும்பாலான எம்எஸ்-டாஸ் பயன்பாடுகளும் ஓஎஸ்/2-வில் செயல்படும். அனைத்து எம்எஸ்-டாஸ் வட்டுகளையும் படிக்கும். பிரசென்டேஷன் மேனேஜர் என்கிற துணை அமைப்பைக் கொண்டது. இது வரைகலைப்பணிச் சூழலை வழங்குகிறது. பிணைய வசதிகளைப் பெற "லேன் மேனேஜர்' உண்டு. வங்கிகள் நிறுவியுள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் ஓஎஸ்/2 முறைமையே பயன்படுத்தப்படுகிறது.

oscillate : ஊசலாடு : மிகக் குறைந்ததற்கும், மிக அதிகமானதற்குமான மதிப்புகளுக்கு மிடையில் வந்துவந்து போவது. ஊசலாடுவது என்பது ஒரு சுழற்சி. மாறும் அலைவு எண்ணின் ஒரு முழு அலை.

oscillating sort : ஊசல் வரிசையமைவு : ஒரு நாடா இயக்கியின் திறம்பாட்டிற்கு முன்னும் பின்னும் படிப்பதற்கான வசதியைக் கொடுக்கும் புறநாடா வரிசையமைவு.

oscillation : ஊசலாட்டம் : குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுகின்ற மாற்றத்துக்கு உள்ளாகும் நிலை. மின்னணுவியலில் ஊசலாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட சமிக்கையில் ஏற்படுவது.

oscillator : அலையியற்றி : ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறிக்கொண்டே இருக்கும் வெளியீட்டைத் தருகின்ற மின்னணுச் சுற்று. நிலையான அல்லது மாற்றத்தக்க வெளியீட்டைத் தரக்கூடிய வகையிலும் வடிவமைக்க முடியும். மின்னணுச் சுற்றுகளில் அலை இயற்றிகள் மிகவும் முக்கியமானவை. நிலையான அலைவரிசையை உருவாக்க சில அலை இயற்றிகள் குவார்ட்ஸ் படிகத்தைப் பயன்படுத்துகின்றன. செர்ந்தக் கணினிகளில் கடிகார அலைவரிசையை வழங்க ஓர் அலை இயற்றி பயன்படுத்தப்படுகிறது. 1 முதல் 200 மெகா ஹெர்ட்ஸ் வரை துடிப்பவை. செயலியும் மற்றபிற மின் சுற்றுகளும் இதனடிப்படையில் இயங்குகின்றன.