பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1057

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oscillography

1056

OSPF


oscillography : ஊசல் உருவாக்கம் : ஊசல் வரைவியல் : ஓர் எதிர்மின்வாய்க் கதிர்க்குழலின் முகப்பில் மின்னியல் குறியீடுகளின் ஒரு தோரணியை உருவாக்கிக் காட்டுதல்.

oscilloscope : ஊசல் உருவாக்கக் கருவி : அலைவு நோக்கிக்கருவி : இருளில் ஒளிவிடும் ஒரு திரையில் சுடரொளி வீசுகின்ற ஒரு பரப்பிடத்தை உண்டாக்குகின்ற ஒரு மின்னணுவியல் சாதனம். இது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையிலான தொடர்பினைக் காட்டுகிறது. கணினி பராமரிப்புத் தொழில் நுட்பாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

OSF : ஓஎஸ்எஃப் : திறந்தநிலை மென்பொருள் கழகம் என்று பொருள்படும் open Software Foundation என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிஇசி, ஐபிஎம், ஹெச்பீ போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஆதாய நோக்கில்லாக் கூட்டமைப்பு. 1988இல் நிறுவப் பட்டது. யூனிக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படும் நிரல்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வரன்முறைகளை வளர்த்தெடுப்பதும், மூல நிரல் இந்த அமைப்பின் நோக்கம். பகிர்ந்தமை கணிப் பணிச்சூழல் (Distributed Computing Environment), மோட்டிஃப் என்னும் வரைகலைப் பணிச்சூழல் (GUI), ஓஎஸ்எஃப்/1 என்னும் இயக்க முறைமை (யூனிக்ஸின் இன்னொரு வடிவம்) ஆகியவை ஓஎஸ்எஃபின் படைப்புகளில் சில.

OSPF : ஓஎஸ். பீ. எஃப் : திறந்த மீக்குறு பாதை முதலில் எனப்பொருள்படும் Open Shortest Path First என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் போன்ற ஐ. பீ பிணை யங்களுக்கான திசைப்படுத்தும் நெறிமுறை. ஒவ்வொரு கணு (node) வையும் செய்தி சென்றடைவதற்கான மிகக்குறுகிய பாதை எது என்பதைக் கணக்கிட்டு திசைவி (Router) வழிப்படுத்தும். திசைவி அதனோடு இணைக்கப்பட்ட கணுக்களிலுள்ள தொடுப்பு-நிலை விளம்பரம் (Link-State Advertisements) என்றழைக்கப்படும் தரவுவை, பிணையத்திலுள்ள பிற திசைவிகளுக்கு அனுப்பி வைக்கின்றன. அங்கே தொடுப்புநிலைத் தரவு ஒன்று