பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1060

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

output buffer

1059

output stream


வேக தரவு தொடர்புக் கம்பிகள் அல்லது அச்சுப்பொறிகள்.

output buffer : வெளிப்பாட்டு இடையிடம்; வெளியீட்டு இடை நினைவகம்;வெளிப்பாட்டு நினைவறை : தரவுவை ஒரு புறச்சாதனத்திற்கு மாற்றப் பயன்படுத்தப்படும் கிடைத்தடுப்பு நினைவகம்.

output channel : வெளிப்பாட்டுத் தடம் : புறநிலை அலகுகளையும் மையச் செயலகத்தையும் இணைக்கின்ற ஒரு இணைப்புத்தடம். இதன் வழியாக வெளிப்பாட்டுக்காக தரவுகளை அனுப்பலாம்.

output channel, input : உள்ளீட்டு வெளியீட்டுத் திட்டம்.

output data : வெளிப்பாட்டுத் தரவு : செய்முறைப்படுத்துதலுக்குப் பிறகு ஒரு சாதனத்திலிருந்து அல்லது செய்முறையிலிருந்து வழங்கப்படும் தரவு. இது உட்பாட்டுத் தரவிலிருந்து வேறுபட்டது.

output device : வெளிப்பாட்டுச் சாதனம் : ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் பதிப்பி;இலக்க வரைவி : அச்சடிப்பி; ஒளிக்காட்சி முனையம். இது உட்பாட்டுச் சாதனத்தி லிருந்து வேறுபட்டது.

output media : வெளிப்பாட்டு ஊடகம் : வெளிப்பாட்டுத் தரவுகளைப் பதிவு செய்வதற்கான இயற்பியல் பொருள். எடுத்துக்காட்டு : காகிதம், காந்த வட்டு, காந்த நாடா.

output primitives : வெளிப்பாட்டு அடிப்படைகள் : திரையில் படங்களை உருவாக்கப் பயன்படும் அடிப்படை உறுப்புகள்.

output signal, zero : வெளியீடில்லாக் குறிகை.

output statement : வெளிப்பாட்டுக் கட்டளை : விவரங்களை, விவரங்களின் அடிப்படையில் கணித்தறியப்பட்ட விடையை பயனாளருக்கு திரை யிலோ, அச்சிலோ, வட்டுப் பதிவாகவோ தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல் தொடர்.

output stream : வெளிப்பாட்டுத் தாரை : வெளியீட்டு ஓடை : ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்பட வேண்டிய தரவுகளின் வரிசைத் தொகுதி.