பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1063

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

overlay

1062

overscan


காட்சிகளில், நிகழ்நேர அல்லது முன் பதியப்பட்ட ஒளிக்காட்சிச் சமிக்கைகளின் மீது கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு வரைகலைப் படிமத்தை மேல் பொருந்தச்செய்தல்.

overlay card : மேலோட்ட அட்டை : கணினியில் காட்டுவதற்கான ஒளிக்காட்சி மூலத்திலிருந்து வரும் என். டி. எஸ். சி. சமிக்கைகளை இலக்கப்படுத் தும் கட்டுப்பாட்டுப் பொறி.

overloading : அதிகப்பளு ஏற்றல் : நிரல் தொடரமைப்பால் ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே கணிப்புக் குறியீட்டினை வேறுவேறு விவர இனங்களுக்குப் பயன்படுத்தும் திறன். இதனால் சூழ்நிலைக்கேற்ப அவற்றை வேறுபடுத்த வேண்டியது தொகுப்பின் வேலையாகிறது.

overloading constructor : பணி மிகுப்பு ஆக்கி.

overprint : மேலச்சு : எழுத்தின் தோற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அச்சிடும் செய்முறை.

overpunch : மேல் துளையிடல் ; கூடுதல் துளையிடல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளுடைய ஒரு அட்டையின் பத்தியில் மேலும் துளைகளையிடுதல்.

override : மேலாணை ; மேலூர்தல் ; ஊர்ந்தியங்கல் : ஒரு செயல்முறைக்குப் பதிலாக்கம் செய்வதன்மூலம் முன்னிருக்கும் மதிப்பினை மாற்றும்படி செய்தல்.

overrun : மேலோட்டம் ; மிகையோட்டம் ' ஊர்ந்தியங்குதல் : ஒரே காலத்தில் இயங்கும் ஊடகத்தைக் கொண்ட இடைத் தடுப்பிலாக் கட்டுப்பாட்டு அலகிலிருந்து தரவுகளை மாற்றம் செய்யும்போதும் வழித்தடத்தின் திறம்பாட்டிற்கு மீறுகையாக நடவடிக்கையைச் செயல்முறை தூண்டும்போது ஏற்படும் நிலை.

overscan : மிகை நுண்ணாய்வு ; மிகை வருடல் : கணினி திரை