பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1066

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

packet assembler

1065

packet lossage


முகவரி, பிழைக்கட்டுப்பாடு போன்ற கட்டுப்பாட்டு செய்திகளையும், தரவுகளையும் இது உள்ளடக்கியிருக்கும்.

packet assembler/disassembler : பொட்டலச் சேர்ப்பி/பிரிப்பி;பொதிச் சேர்ப்பி/பிரிப்பி : ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்துக்கும், பொட்டல இணைப்பகமல்லாக் கருவிக்கும் இடையிலான ஒர் இடைமுகம்.

packet driver : பொட்டல இயக்கி;பொதி இயக்கி.

packet filtering : பொட்டல வடிகட்டல்;பொதி வடிகட்டல் : ஐபீ முகவரிகளின் அடிப்படையிலான பிணைய அணுகலைக் கட்டுப்படுத்தும் செயல்பாடு. பொதுவாக, தீச்சுவர் (firewall) அமைப்புகள் வடிகட்டிகளைக் கொண்டுள்ளன. பயனாளர்கள் ஒரு குறும்பரப்புப் பிணையத்துள் நுழையவோ வெளியேறவோ அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் பணியை இவ்வடிகட்டிகள் செய்கின்றன. மின்னஞ்சல் போன்ற தரவுப்பொட்டலங் களை அவை அனுப்பப்பட்ட இடத்தின் அடிப்படையில் ஏற்கவோ, புறக்கணிக்கவோ பொட்டல வடிகட்டல்முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனியார் பிணையத்தின் பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

packetized voice : பொதியப்பட்ட குரல் : நடப்பு நேர குரலை பொதி நிலை மாற்று கட்டமைப்பில் அனுப்புதல்.

packing : பொதிவாக்கம்;பொதித்தல் : தனியொரு சேமிப்பாக எட்டியலில் இரு எண்களைச் சேமித்து வைக்கும் செய்முறை.

packing density : பொதிவாக்க அடர்த்தி;பொதியடர்த்தி : பரப்பிடத்தின் ஒர் அலகில் அல்லது நீளத்தில் அடக்கி வைக்கப்படும் பயனுள்ள சேமிப்புச் சிற்றங்களின் எண்ணிக்கை. இது, பதிவாக்க அடர்த்தி என்றும் அழைக்கப் படும். எடுத்துக்காட்டு : ஒர் அங்குலத்திலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை.

packet lossage : பொதிவு இழப்பு : ஒரு ஏற்புடைய நேரத்திற்குள் கிளம்பிய இடத்திலிருந்து போய்ச் சேரவேண்டிய இடத்திற்குத் தரவுகள் போய்ச் சேராத நிலை ஒரு கட்டமைப் பில் தரவுகளுக்கு ஏற்படுதல். பாக்கெட்டுகள் தொலைந்து