packet sniffing
1066
paddle
போனால் அவற்றை மீண்டும் அனுப்ப வேண்டும். இதனால் தரவுத் தொடர்பு தாமதமாகிறது.
packet sniffing : பொதி முகர்தல் : ஒரு கட்டமைப்பில் உங்களுக்காக இல்லாத பொதிகளைப் படித்தல். ஈத்தர்நெட் புரோட்டோகால் வேலை களினால் உங்கள் எந்திரத்தை பிறருக்கான பொதியை கவனிக்குமாறும் அதே குறும்பரப்புக் கட்டமைப்பில் உள்ள பிற கணினிகளைப் பார்க்குமாறும் அமைக்கலாம். இதன் மூலம்"in the clear"என்ற முறையில் அவர்கள் அனுப்புவதை கவனிக்கலாம். (அதாவது ஒரு பொதி முகரும் நிரல் தொடர் மற்றும் in the clear இல் பயனாளர் அனுப்பும் பெயர் மற்றும் அனுமதிச் சொல்லைக் கவனிக்கலாம்).
packet switching : பொதி நிலை மாற்று : ஒரு தகவல் அனுப்பும் செயல்முறை. பொதியை அனுப்பும் சமயத்தில் மட்டுமே அந்த வழித்தடம் அடைபட்டிருப்பது போன்று முகவரியிடப்பட்ட பொதிகளை இது அனுப்புகிறது.
PacKIT : பேக்கிட் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் பயன்படுத்தப் படும் ஒரு கோப்பு வடிவாக்கம். மேக் (mac) கோப்புகளின் தொகுதிகளைக் குறிக்கிறது. பெரும்பாலும் அக்கோப்புகள்-ஹஃப் மேன் முறையில் இறுக்கிச் சுருக்கப்பட்டிருக்கும்.
pad : திண்டு : அட்டை மேடை : 1. ஒர் அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகையில் அமைப்பாக வரித்தகடுகளைப் பற்றவைப்பதற்கான ஒர் இணைப்பினை ஏற்படுத்துகிற தகடாக்கிய செப்புப் பரப்பு. அதாவது அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறிச் செல்வதற்கான செப்புவழி. 2. ஒரு தரவு புலத்தை வெற்றிட அச்செழுத்துகளால் நிரப்புதல்.
pad character : திண்டு எழுத்து : ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இடைத்தடுப்பு எழுத்து.
padding : திண்டாக்கம் : ஒரு குறிப்பிட்ட நீளத் தகவல் பாளத்தினை போலி எழுத்துகள், சொற்கள், பதிவுகள், ஆகியவற்றினால் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி.
paddle : துடுப்பு : மத்து : ஒரு காட்சி முனையச் சறுக்குச் சட்டத்தை நகரும்படி செய்வதற்காகக் கையாளப்படும் சாதனம். துடுப்பிலுள்ள ஒரு சுழல்