பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

audio

106

audio compression


பான தரக்கோட்பாடுகள். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் திறன்கள் உள் இணைக்கப்பட்ட தாய்ப்பலகை பற்றியவை. அனைத்துச் செருகுவாய்களிலும் முழு நீளப் பலகைகளையும், யுஎஸ்பி துறைகளையும் ஏடி எக்ஸ் ஏற்க வல்லது.

audio : கேட்பொலி : மனிதரால் கேட்கக் கூடிய ஒலி.

audio board : கேட்பொலி அட்டை : தனிநபர் கணினி விரிவாக்க அட்டை. ஒலியை உருவாக்கி வெளியில் உள்ள சிறிய ஒலிபெருக்கிகளுக்காக அதைப் பெரிதாக்கித் தருகிறது. ஒலி அட்டை (sound card) என்றே பெரிதும் அழைக்கப்படும்.

audio card : கேட்பொலி அட்டை : கணினியின் தாய்ப்பலகையில் பொருத்தக் கூடிய விரிவாக்க அட்டை. தொடர்முறை (analog) வடிவிலான கேட்பொலிச் சமிக்கைகளை இலக்கமுறைக்கு மாற்றி, கணினியில் கோப்புகளாகப் பதிவு செய்யவும், கணினிக் கோப்புகளை மின்காந்த சமிக்கைகளாக மாற்றி ஒலி பெருக்கி மூலம் கேட்பொலியாகத் தரவும் இவ்வட்டை பயன்படுகிறது. கணினியில் இணைக்கப்பட்ட ஒலிவாங்கி மூலம் கேட்பொலியை உள்ளீடாகத் தர முடியும். வெளியீட்டு ஒலியை ஒலிபெருக்கி மற்றும் தலைபேசி (headphone) மூலமாகக் கேட்க முடியும். கேட்பொலிக் குறுவட்டுகள், ஒலிநாடாக்கள் மற்றும் இணையத்திலிருந்தும் ஒலியை/ இசையை/ பாடலைக் கேட்பதற்கு கேட்பொலி அட்டைகள் உதவுகின்றன. இவை ஒலி அட்டை, ஒலிப்பலகை, கேட் பொலிப் பலகை என்றும் அழைக்கப்படுகின்றன.

audiocast : கேட்பொலி பரப்புகை : இணைய நெறி முறை எனப்படும் ஐபீ நெறி முறையைப் பயன்படுத்தி கேட்பொலிச் சமிக்கைகளைப் பரப்புதல்.

audio cassette : கேட்பொலிப் பேழை, ஒலிப் பேழை.

audio CD : ஒலிக் குறுவட்டு; கேட்பொலிக் குறுவட்டு.

audio compression : கேட்பொலி இறுக்கம் : கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஓர் ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும்

போதோ ஏற்படும்