பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1072

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

page recognition

1071

Page Up key


அல்லது கட்டுப்பாட்டுக் குறியீடு மூலம் தீர்மானிக்கப் படுகிறது.

page recognition : பக்கம் கண்டறிதல் : கணினியில் ஸ்கேன் செய்யப் படும் அச்சிட்ட பக்கத்தில் உள்ள உள்ளடக்கங்களைக் கண்டறியக்கூடிய மென்பொருள். ஒளி எழுத்து கண்டறிதலைப் பயன்படுத்தி அச்சிடப்படும் சொற்களை கணினி சொற்பகுதியாக மாற்றும். ஆனால் அதேவேளையில் ஒரு பக்கத்தில் உள்ள படங்கள் மற்றும் தலைப்புகளில் இருந்து சொற்பகுதி தானாகவே வேறு படுத்தப்பட்டு அறியப்படும்.

page set-up : பக்க அமைப்பு : காகிதத்தில் சொற்பகுதி வரை படங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பதையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப் பில் இடம் பெறுவனவாக ஒரங்கள், தொடர் தலைப்புகள், பக்க எண்ண மைத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

page setup/page preview : பக்க அமைவு/பக்க முன்காட்சி.

page size : பக்க அளவு;தாள் உருவளவு.

page skip : பக்கம் விடுதல்;பக்கத் தாவல் : நடப்புப் பக்கத்தின் எஞ்சிய பகுதியை தள்ளி விட்டு அடுத்த பக்கத்தின் உச்சிப்பகுதிக்கு அச்சடிப்பி நகர்ந்து செல்லும்படி செய்யக் கூடிய கட்டுப்பாட்டு எழுத்து.

pages per minute : பக்கங்கள் ஒரு நிமிடத்தில் : சுருக்கமாக பீ. பீ. எம் (PPM அல்லது ppm) எனக் குறிக்கப்படும். ஒர் அச்சுப் பொறியின் வெளியீட்டுச் செயல்திறனைக் குறிக்கும் அளவீடு. ஒரு நிமிடத்தில் எத்தனை பக்கங்கள் அச்சிடும் என்பதைக் குறிக்கிறது. இந்த அளவீட்டை அச்சுப்பொறியைத் தயாரிக்கும் நிறுவனங்களே குறிப்பிடுகின்றன. பக்கம் என்பது வழக்கமான சாதாரணமான (ஏ4) பக்கத்தைக் குறிக்கும். அச்சிடும் பக்கங்களில் அதிகப்படியான வரைகலைப் படங்களோ எழுத்துரு அமைப்புகளோ இருப்பின் அச்சிடும் வேகம் அச்சுப்பொறியில் குறிப்பிட்டுள்ள பீபீஎம் வேகத்தைவிட வெகுவாகக் குறைந்திருக்கும்.

page up : மேல் பக்கம்;ஏறு பக்கம்.

Page Up key : மேல் பக்க விசை : பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgUp எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு