பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1075

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

palmtop

1074

PAP


palmtop : கையகக் கணினி;கையளவு : ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால். இயக்கக்கூடிய அளவு சிறியதாக உள்ள கணினி. கையளவு சிறப்பு விசைப் பலகைகள் அல்லது விசை அட்டைகள் அமைக்கப்பட்டு தரவு நுழைவு பயன்பாடுகள் செய்யப்படும். அல்லது குவெர்ட்டி (Qwerty) விசைப் பலகைகள் இருக்கும்.

PAM : பீஏஎம் : "துடிப்பு வீச்சு ஏற்ற இறக்கம்"என்று பொருள்படும்"Pulse Amplitude Modulation"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதில் துடிப்பு வீச்சு ஏற்ற இறக்கச் சகடத்தின் மூலம் ஏற்ற இறக்க அலை உண்டாக்கப்படுகிறது.

pan : இடவல நகர்வு : ஒரு ஆவணம் அல்லது விரிதாளின் ஒரு பக்கத்திலிருந்து வேறொருப் பக்கத்திற்கு பக்கவாட்டாக நகர்வது. திரையைவிட ஆவணம்/விரிதாள் கூடுதல் அகலமாக இருக்குமானால் இது மிகவும் பயனுள்ளதாகும்.

pane : சாளரப் பாளம், சாளரப் பிரிவு : தனியொரு சாளரத்தைப் பிரித்து உருவாக்கப்படும் பகுதிகள்.

panel : பலகைப் பாலம்.

panel, control : கட்டுப்பாட்டுப் பலகம்.

panning : பக்கவாட்டு நகர்வு;இட வல நகர்வு : ஒரு காட்சித் திரையின் குறுக்கே காட்சியாகக் காட்டப்படும் வரைகலை தரவுகளின் கிடைமட்ட நகர்வு.

PAP : பீஏபீ : 1. நுழைசொல் சான்றுறுதி நெறிமுறை என்று பொருள்படும் Password Authentication Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முனைக்குமுனை நெறிமுறையை (point-to-point protocol) பயன்படுத்தும் வழங்கனில் பயனாளர் நுழைய முயலும்போது அவருடைய அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான ஒரு வழிமுறை. இதை விடக் கண்டிப்பான சாப் (CHAP-Challenge Hand-Shake Authentication Protocol) நெறி முறை இல்லாதபோது பீஏபீ மிகவும் பயன்தரும். பயனாளர் பெயரையும் நுழைசொல்ல்லையும் மறையாக்கமின்றி வேறொரு நிரலுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நேரும் போதும் இது பயன்படும். 2. அச்சுப்பொறி அணுகல் நெறிமுறை என்று பொருள்படும் (Printer Access Protocol) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயராகவும் கொள்ளலாம். ஆப்பிள்டாக்