paper feed
1075
paper tape
பிணையங்களில் கணினிகளுக்கும் அச்சுப்பொறிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பினை மேலாண்மை செய்யும் நெறிமுறை ஆகும்.
paper feed : காகித ஊட்டம்;தாள் ஊட்டம் : ஒர் அச்சடிப்பிக்குள் காகிதத்தைச் செலுத்தும் முறை.
paper jam : காகித அடைப்பு : அச்சுப்பொறி, தொலை நகல் அல்லது ஒளிநகல் பொறிகளில் காகிதம் மாட்டிக் கொள்ளுதல். காகித அடைப்பை தடுப்பது மற்றும் சமாளிப்பதுபற்றிய ஆலோசனை விளக்கக் கையேட்டில் பொதுவாக இருக்கும்.
paperless office : காகிதமற்ற அலுவலகம் : தாளிலா அலுவலகம் : காகிதமற்ற அலுவலகம் பற்றி நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதும் ஒரு கட்டுக் கதையாகவே உள்ளது. சில நிறுவனங் களில் காகிதப்பயன் குறைந்தாலும் பலவற்றில் உண்மையாகவே கூடியிருக்கிறது. மேலும் காகித ஆவணமே இப்போதும் பரிமாற்றங்கள்மூலம் நிலை நாட்டப்பட்டு உள்ளது. சமயத்தில் அதிக சேமிப்பும் துல்லியத் திரைகளும் உள்ள கையகக் கணினிகள் பயணம் செய்யும் போது காகிதத்திற்கு மாற்றாக உள்ளன. ஒளி இழை கட்டமைப்புகள், தரவு, படம், குரல் மற்றும் காட்சியை விரைவாக அனுப்ப உதவுகின்றன. வண்ண லேசர் அச்சுப்பொறிகள் எங்கும் பரவி உள்ளதால், எத்தகைய சிக்கலானதாக இருந் தாலும், ஆவணத்தை மீண்டும் உருவாக்குவது எளிதானதே.
paper-out sensor : காகித வெளி உணர் கருவி : பிளேட்டனுக்குப் பின்னால் உள்ள ஒரு சிறிய பொத்தான். காகிதத்துடன் அதன் தொடர்புவிட்டுப் போகும் போது உடனடியாக சைகை தருகிறது. இந்த சைகை பொதுவாக, அச்சுப்பொறியினை நிறுத்துகிறது.
paper source : தாள் வைப்பிடம்.
paper tape : காகித நாடா : தாள் நாடா : கணினிகளில் பயன்படுத்தப்படும் முதலாவது உட்பாட்டுச் சாதனம். இது தொலையச்சு (Telex) எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு தொடர்ச்சியான பட்டைக் காகிதம் ஆகும். இந்தப் பட்டைக் காகிதத்தின் அகலத்தின் குறுக்கே, குறித்துரைக்
கப்பட்ட எண்ணிக்கையிலான வரிசைகளிலும் (chemicals), காகிதப் பட்டையின் நீளவாக்கில் பத்தி