பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1080

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parallel and serial port

1079

parallel database


பகுதிகள் செயல்படுமாறு அமைத்தல். இணை நிலைப் படிமுறைகள் பெரும்பாலும் பல்செயலாக்க சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

parallel and serial port : இணை நிலை மற்றும் நேரியல் துறை.

parallel arrays : இணை வரிசைகள் : ஒன்றோடொன்று தொடர்புள்ள இரண்டு அல்லது மேற்பட்ட வரிசைகள்.

parallel circuit : ஒருபோகு (மின்) சுற்றுவழி;இணைச்சுற்று : அமைப் பிகள் ஒவ்வொன்றின் இருமுனைகளும். ஒன்றுக்கொன்று இணையாக இணைக் கப்பட்டுள்ள மின்சுற்று வழி.

parallel computer : ஒரு போகு கணினி;இணைக் கணினி : எண்கள் அல்லது தரவு வரிகள் கணினியின் தனித்தனி அலகுகளினால் ஒருங்கே செய்முறைப் படுத்தப்படக்கூடிய கணினி.

parallel computing : இணை நிலை கணிப்பணி : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண அல்லது ஒரு பணியைச் செய்து முடிக்க பல கணினிகளையோ அல்லது பல செயலிகள் கொண்ட கணினியையோ பயன்படுத்தும் முறை.

parallel conversation : இணை உரையாடல்.

parallel conversion : மாற்றம்;இணை மாற்றம் : ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது பழைய மற்றும் புதிய பொறியமைவுகள் இரண்டையும் இயக்கும்படி செய்து ஒரு புதிய தரவு செய்முறைப்படுத்தும் பொறி யமைவுக்கு மாற்றக் கூடிய செய்முறை.

parallel database : இனை நிலை தரவுத் தளம் : ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத்தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தரவு பரிமாற்றங்கள், உள்ளீடு/வெளியீடு கையாளல், தரவு இடையக நிறுத்தம் போன்ற தரவு மேலாண்மைக் கோரிக்கைகளை நிறைவேற்ற இவை பயன்படுத்திக் கொள்ளப்படும். ஒரு இணைநிலை தரவுத் தளம், ஏராளமான உடன்நிகழ் பணிகளை பல செயலிகள் மூலமாகவும் பல சேமிப்புச் சாதனங்களிலுள்ள தரவுகளிலிருந்தும் நிறைவேற்றிக் கொள்ளும் திறன்படைத்தது. பல நூறு

கிகாபைட் தரவு சேமிக்கப்பட்டுள்ள தரவு தளங்களிலும் விரைவான அணுகல் இயல்கிறது.