பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1081

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parallel error

1080

parallel processing


parallel error : இணைப் பிழை;நோக்கு மயக்கப் பிழை;விழிக் கோட்ட வழு.

parallelelizing : இணையாக்கல் : இணை செயலாக்கக் கணினிக்காக நிரல்களை உருவாக்குதல்.

parallel input/output : ஒரு போகு உட்பாடு/வெளிப்பாடு;இணை உள்ளீடு/வெளியீடு : ஒவ்வொரு துண்மிக்கும் தனக்கெனச் சொந்தக் கம்பியைக் கொண்டிருக்கிற தரவு அனுப்பீடு. அனைத்துத் துண்மிகளும் ஒரே சமயத்தில் அனுப்பப்படுகின்றன. இது, ஒரு சமயத்தில் ஒரேயொரு துண்மியை மட்டுமே அனுப்புவதிலிருந்து வேறுபட்டது. இது தொடர் உட்பாடு/வெளிப்பாடு என்பதற்கு மாறுபட்டது.

parallel interface : ஒருபோகு இடைமுகப்பு;இணை இடை முகம் : ஒரு பாதைத் தொகுதியின் வழியே ஒரே சமயத்தில் தகவல்களை மாற்றக்கூடிய சாதனத்தின் வரம்பெல்லை.

parallel operations : இணைச் செயல்பாடுகள்.

parallel operator : இணைநிலை செயற்குழு;ஒருபோகு செயற்பாடு; இணை இயக்கம் : ஒரே தன்மையுடைய பல செயற்பாடுகளை அத்தகைய செயல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஒரேமாதிரியான அல்லது சரி யொத்த சாதனங்களை அமைப்பதன்மூலம் ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல்.

parallel port : இணை துறை : உ/வெ இணைப்பு. அச்சுப்பொறி அல்லது பிற இணை இடை முக சாதனத்துடன் இணைக்கப் பயன்படுகிறது. பீசியில் இது 25-பின் பெண் டிபி-25 இணைப்பி எனப்படும்.

parallel printer : ஒரு போகு அச்சடிப்பி;இணை அச்சுப் பொறி : ஒரே சமயத்தில் 8 கம்பிகளின் வழியே ஒர் எழுத்தினை (எழுத்து எண் முதலியன) கணினியிலிருந்து பெறுகின்ற அச்சடிப்பி.

parallel printing : ஒரு போகு அச்சடித்தல்;இணை அச்சிடல் : ஒரே சமயத்தில் ஒரு வரிசை முழுவதையும் அச்சடித்தல்.

parallel processing : இணைச் செயல்பாடு;இணை அலசல்;ஒருபோகு செயல்பாடு;இணைச் செயலாக்கம்;ஒருபோகு செய்முறைப்படுத்துதல் : பன்முகச் சாதனங்களில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செய் முறைகளை ஒருங்கே அல்லது ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல்.