பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1083

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parametric

1082

parity


பாதுகாக்கப்படும் சீமாஸ்-ரேமில் உள்ள ஒரு பகுதி. கணினி அமைப்பின் தகவமைவு பற்றிய தரவு இதில் சேமிக்கப்பட்டிருக்கும். பீரேம் (PRAM) என்று சுருக்கமாகக் கூறுவர்.

parametric : நிலையளவுருக்கள் சார்ந்த : ஒரு கோட்டு வளைவினை அல்லது இடப்பரப்பினை சில தற்காப்பு மாறிலிகளின் அடிப்படையில் வரை யறுக்கிற உத்தி தொடர்பானது. கணினிவழி வடிவமைப்புப் பொறியமை வுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

parent : தாய்க்கோப்பு : புதிய பதிவுருக்களை உருவாக்குவதற்குத் தேவைப்படுகிற, ஒரே தரவு ஆதாரமாக இருக்கக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்டது.

parent-child : பெற்றோர்குழந்தை : தகவல் தள மேலாண்மையில் இரண்டு கோப்புகளுக்கு இடையிலான உறவு முறை. பெற்றோர் கோப்பில் தொழிலாளர், வாடிக்கையாளர் போன்ற ஒரு பொருளைப் பற்றிய தேவையான தரவு இருக்கின்றது. குழந்தை அதிலிருந்து உருவானது. சான்றாக, ஒரு நிறுவனக் கோப்பின் குழந்தை என்று அதன் தொழிலாளர் கோப்பினைக் குறிப்பிடலாம்.

parentheses : இடை முறிப்புக் குறிகள்;பிறை வளைவான : பிறை வடிவ வளை அடைப்புக் குறிகள். இவை ( ) என்று குறிக்கப்படும். கணிதக் கணிப்பு களில் வளை அடைப்புக் குறிகளுக்குள் உள்ள செயற்பாடுகள் முதல் முந்துரிமை வாய்ந்த தனிச்செயற்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

parent menu : தலைமைப் பட்டி.

parent process : பெற்றோர் செயலாக்கம் : வேறொரு துணைப்பகுதி (அல்லது குழந்தை) செயலாக்கத்தை உருவாக்குகின்ற நிரல்தொடரின் (செயல் முறை) ஒரு பகுதி.

parent programme : பெற்றோர் நிரல் தொடர் : நினைவகத்தில் ஏற்றப்படும் முதல் அல்லது தலைமை அல்லது அடிப்படை நிரல் தொடர்.

parent/child relationship : தாய்/சேய் உறவு நிலை : செய்திகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல். புதிய செய்தியை (சேய்) உருவாக்கு வதற்குப் பழைய செய்தி (தாய்) இன்றி யமையாததாகும்.

parity : சமன் : சமமாய் இருத்தலைக் குறிக்கும். கணினித்