பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1085

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Parkingson's Law

1084

parts list


அந்த அலகை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு வருமுன் படி/எழுது முனையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளல். மின்சாரம் நிறுத்தப்படும்போது பெரும்பாலான நவீன இயக்கிகள் இவ்வாறு நிறுத்திக் கொள்கின்றன.

Parkingson’s Law : பார்க்கின்சன் விதி.

parse : அலகு : ஒரு சொற்பகுதி சரத்தினை அதன் பிரிவு பகுதிகளுக்கு கொண்டு செல்லுதல். டாஸ் (DOS) மூலம் கட்டளை வரி தகவலை அலகிட்டு கோப்பு அணுகு பணிகளில் பயன்படுத்துவதற்காக திருத்தி அமைக்க முடியும்.

parser : பாகுபடுத்தி/பகுப்பாய்வி : அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்து, அறிந்து கொள்கிற செயல்முறை அல்லது துணை வாலாயம்.

parsing : பாகுபடுத்தல்;அலகிடல் : 1. அறிக்கைகளைச் சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகுபடுத்தும் செயல்முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளிதாகச் செய்முறைப்படுத்தும் அமைப்புக் குழுமங்களாகப் பகுத்தல்.

part address : முகவரிப் பகுதி.

participatory media : பங்கேற்கும் தகவலகம்.

partition : பிரிவினை : நினைவகத்தில் ஒரு செயல்முறை நிறை வேற்றப்படும்போது அச்செயல் முறைக்கெனக் குறித்தொதுக்கப்படும் பகுதி.

partitioning : பிரிவினை செய்தல்;பிரிப்பு : ஒரு கணினியின் சேமிப்புப் பகுதியைக் குறிப்பிட்ட பணிகளுக்காக அல்லது அலுவல்களுக்காக ஒதுக்கப் பட்ட சிறுசிறு அலகுகளாக உட்பகுப்பு செய்தல்.

partition table : பிரிவினைப் பட்டியல் : ஒரு நிலையான வட்டின் முதன்மைத் தொடக்கப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியல். ஒவ்வொரு பிரிவின் அளவு மற்றும் இருப்பிடம் பற்றிய தகவலை அது கொண் டிருக்கிறது.

parts explosion : உறுப்பு வரைதல் : ஒர் இணைப்பில் அடங்கியுள்ள அனைத்துக் கூறுகளையும் வரைதல். இது இந்தக் கூறுகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பினைக் காட்டும்.

parts list : உறுப்புப் பட்டியல் : உற்பத்தி செய்யப்பட்ட ஒர்